ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட்., குலேவாடி, அஹ்மத்நகர் – அபராதம் விதிககப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட்., குலேவாடி, அஹ்மத்நகர் – அபராதம் விதிககப்பட்டது
ஜூலை 25, 2019 ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட்., குலேவாடி, இந்திய ரிசர்வ் வங்கி வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) இன் பிரிவு 46 (4) பிரிவுடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதியின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட், குலேவாடி, அஹ்மத்நகர் மீது ரூ.1.00 லட்சம் (ஒரு லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது அர்பன் கோஆபரெடிவ் வங்கிகள் (யுசிபி) டிவிடன்ட் அறிவிக்க இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகள்/ அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களை மீறியதற்காக விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகள் மற்றும் வங்கியின் பதிலை ஆராய்ந்த பின்னர், மேற்கூறப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் விதி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/246 |