RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78490028

இந்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள், திரு. R. காந்தி மற்றும் திரு. S. S. முந்த்ரா ஆகியோர் கரன்சி நோட்டுகள் சார்ந்த சவால்கள் குறித்து முகமைகளுக்கு அளிக்கும் தகவல்கள் – சுருக்கமாக

டிசம்பர் 13, 2016

இந்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள், திரு. R. காந்தி மற்றும் திரு. S. S. முந்த்ரா
ஆகியோர் கரன்சி நோட்டுகள் சார்ந்த சவால்கள் குறித்து முகமைகளுக்கு அளிக்கும்
தகவல்கள் – சுருக்கமாக

காணொலி இணைப்பு - திரு. காந்தி

  • இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளான நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 10, 2016 வரை வங்கிகள், முகப்புகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் மொத்தமாக ரூ. 4.61 லட்சம் கோடி மதிப்புடைய நோட்டுகளைப் பொதுமக்களுக்கு அளித்துள்ளது.

  • டிசம்பர் 10, 2016 அன்று உள்ள தகவலின்படி, மாற்றப்பட்ட குறிப்பிட்ட நோட்டுகளின் மதிப்பு (இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் கருவூலக் கிளைகளில்) ரூ. 12.44 லட்சம் கோடி.

  • இதே காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் கிளைகள் மூலமாக மொத்த எண்ணிக்கையில் 21.8 பில்லியன் நோட்டுகளை (வெவ்வேறு மதிப்பிலக்கத்தில்) பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளது. அவற்றுள் 20.1 பில்லியன் நோட்டுகள், 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் சிறு மதிப்பிலக்கங்களில் அளிக்கப்பட்டன. 1.7 பில்லியன் நோட்டுகள் 2000 மற்றும் 500 ரூபாய் மதிப்பிலக்கங்களில் அளிக்கப்பட்டன.

  • இவ்வாறு மொத்தமாக பொதுமக்களுக்குப் புழக்கத்திற்கு நோட்டுகளை வழங்குவதற்குத் தொடர்ந்து வங்கி முறைமை முனைப்புடன் செயல்படுகிறது. தினசரி நாங்கள் அதிக அளவில் நோட்டுகளை அச்சடித்தும், வழங்கியும் வருகிறோம். இது ஒரு தொடர் செயல்முறை. பொதுமக்கள் நோட்டுகளைப் பதுக்கிவைக்காமல், கையிருப்பிலுள்ளவற்றைப் பயன்படுத்தி, புழக்கத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காணொலி இணைப்பு - திரு. S. S. முந்த்ரா

  • பல்வேறு வங்கிக் கிளைகளில் சந்தேகத்திற்கிடம் தரும் வகையிலான பரிவர்த்தனைகள் நடப்பதாகவும், சிலவற்றில் வங்கிப் பணயாளர்களும் அவற்றிற்கு உடந்தையாக இருப்பதாகவும் ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகின்றன.

  • இந்த திட்டம் தொடங்கியதிலிருந்தே, வங்கித் துறை மிகச் சிறப்பான பணியை செய்துள்ளது. வங்கிப் பணியாளர்கள் மிக அதிகமான முயற்சிகள் எடுத்து பெரும்பாலானோர் இதற்காக பாராட்டுகளையும் பெற்றுள்ளனர் என்பதை நான் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

  • இவ்வாறான பெரிய அளவிலான நடவடிக்கைகளில் சிலர் எதிர்பார்த்த வகையில் செயல்படாமல் ,வேறுவிதமாக செயல்படக்கூடும். அவற்றைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எல்லா வங்கிகளும் தத்தம் மையத் தகவல்களைக் கவனித்து அவற்றில் ஏதேனும் பொருந்தாத வகையில் இருந்தால், அவற்றை உள்ளகத் தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று எல்லா வங்கிகளின் நிர்வாகிகளுக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

  • இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பாளர்கள், இதே போன்று வங்கிகளின் முக்கிய தகவல் தளங்களைக் கவனித்து வருகிறார்கள். எங்காவது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால், உடனடியாகப் புலன் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  • ஏற்கனவே சில வங்கிகளில் அங்குள்ள பணியாளர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.

  • இந்திய ரிசர்வ் வங்கி பெங்களூரில் உள்ள பணியாளர் ஒருவரைப் பற்றி தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அவர் ஒரு இளநிலைப் பணியாளர். ஒரு வங்கிக் கிளையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான பரிவர்த்தனையின் போது அவர் அங்கு இருந்த்தாகப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கிறது. இதை அறிந்தவுடன் அந்தப் பணியாளர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாங்கள் உரிய புலன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். முழு விவரங்கள் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  • பல புலனாய்வு முகமைகள் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களைத் தெரிவித்தால், இந்திய ரிசர்வ் வங்கி அவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியிலும் மற்ற வங்கிகளிலும் சந்தேகத்தை திரைவிலக்கிக்காட்டும் அமைப்புமுறைகள் உள்ளன. இத்தகைய அமைப்பு முறைகளை, இந்திய ரிசர்வ் வங்கியிலும் மற்ற வங்கிகளிலும், இந்த பெரிய திட்ட நோக்கத்தில் ஊக்குவித்து வருகிறோம். அவற்றின் மூலம் ஏதாவது தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கேள்வி – AXIS வங்கி மீது “விளக்கம் கேட்டு அறிவிக்கை” அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

  • நான் குறிப்பிட்டதுபோல், இப்போதைக்கு அத்தகைய நிகழ்வு எதுவுமில்லை. ஏதாவது நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டால், விசாரணைகள் நடத்தப்படும். ஆனால், தற்சமயம் அத்தகைய அறிவிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1508

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?