தங்கப் பத்திரங்கள் – காகித வடிவிலில்லா பத்திரங்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்கப் பத்திரங்கள் – காகித வடிவிலில்லா பத்திரங்கள்
ஏப்ரல் 28, 2017 தங்கப் பத்திரங்கள் – காகித வடிவிலில்லா பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசின் ஆலோசனையுடன் நாளது தேதி வரை ஏழு தொகுப்புகளாக மொத்தம் ரூ. 4,800 கோடி மதிப்பிற்கு தங்க பத்திரங்களை வெளியிட்டுள்ளது. முதலீடு செய்தவர்கள் இந்த பத்திரங்களை காகித வடிவிலோ அல்லது காகித வடிவின்றி (demat) கணக்கு வடிவிலோ வைத்து பராமரிக்கலாம். காகிதமில்லா கணக்கு வடிவில் இந்த பத்திரங்களை வைத்திருக்க தேர்வு செய்தவர்களின் கோரிக்கைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. ஆனால், சில விண்ணப்பங்களில், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்குக் காரணம், அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பெயர்களில் வேறுபாடுகள், PAN வருமான வரிக்கணக்கு எண்கள் அளிப்பதில் தவறுகள், இயங்காத அல்லது முடிந்துபோன demat கணக்குகள். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படாத கோரிக்கைகளின் பட்டியல் /en/web/rbi/debt-management/other-links/sovereign-gold-bonds தளத்தில் உள்ளன. இதில் எந்தெந்த தொகுப்புகளாக (எந்தெந்த தேதிகளில்) பத்திரங்கள் வெளியிடப்பட்டதோ அதன் வரிசைப்படி தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில், முதலீட்டு விண்ணப்பங்கள் பெற்ற அலுவலகங்களின் பெயர், முதலீட்டாளரின் ID, கோரிக்கை மறுக்கப்பட்ட காரணம் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் இந்தப் பட்டியலைப் பார்த்து அதில் தங்களின் ID உள்ளதா என்று சோதித்தறியலாம். விண்ணப்பங்களைப் பெறும் அனைத்து அலுவலகங்களும் இந்தப் பட்டியலைப் பார்த்து தங்களின் வாடிக்கையாளர்கள் பெயர் அவற்றில் உள்ளதா என்று பார்த்து, உரிய வாடிக்கையாளர்களை அணுகி அவர்கள் உதவியுடன் தேவையான மாற்றங்களைச் செய்து தரவேண்டும். இதன்பொருட்டு திருத்தங்களுக்குத் தேவையான முகப்பு ‘e-kuber’ தளத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனவைகளைத் தவிர்த்து, தங்கப்பத்திரங்கள் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் புத்தகத்தில் கணக்கில் வைக்கப்பட்டு, சீராகப் பராமரிக்கப்படும். (அனிருத்த D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2928 |