தங்கப்பத்திரங்கள் – கணினிவழிப் பதிவு செய்தல் - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்கப்பத்திரங்கள் – கணினிவழிப் பதிவு செய்தல்
ஆகஸ்டு 08, 2017 தங்கப்பத்திரங்கள் – கணினிவழிப் பதிவு செய்தல் இந்தியாவின் ரிசர்வ் வங்கி, இந்திய அரசுடன் கலந்தாலோசித்து, இன்றைய தேதி வரை ரூ. 6,030 கோடி மதிப்பில் தங்கப் பத்திரங்களை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டுள்ளது. இந்த தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்குப் பத்திரங்கள் காகித வடிவிலோ அல்லது கணினிவழிப் பதிவாகவோ வைத்திருப்பதற்கான விருப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. கணினிவழிப் பதிவுக் கோரிக்கைகள் பெரும்பாலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சில பதிவுகளின் தொகுப்பை, பொருந்தாத பெயர்கள் மற்றும் நிரந்தரக் கணக்கு (PAN) எண்கள், புழக்கத்தில் இல்லாத கணக்கு எண்கள்அல்லது முடிக்கப்பட்ட கணினிவழிக் கணக்குகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக செயல்படுத்த இயலவில்லை. அத்தகைய செயல்முறைப்படுத்தப்படாத கணினிவழிக் கணக்குகள் பற்றிய பட்டியல் /en/web/rbi/debt-management/other-links/sovereign-gold-bonds என்ற இணயதளத்தில் உள்ளது. இத்தளத்தில் உள்ள பட்டியலில், பகுதிவாரியான தங்கப்பத்திர முதலீட்டாளர்கள் பெயர்கள் மற்றும் அவர்களது அடையாள அட்டை விவரங்கள், முதலீடு செய்த அலுவலகங்களின் பெயர் போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள், பத்திர விண்ணப்பங்களைப் பெறும் அனைத்து அலுவலகங்களுக்கும் தத்தம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவலைத் தரவும் மற்றும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுடன் பொருத்தமான திருத்தங்களை செய்யவும் தேவைப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் ஈ-குபேர் பதிவுகளில் இந்த நோக்கத்திற்குத் தேவையான தொகுப்புகள் கிடைக்கும். தங்கப்பத்திரங்கள், நிலைப்பாடு எவ்வாறாயினும், இந்திய ரிசர்வ் வங்கிப் புத்தகங்களில் பதிவுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு, வழக்கமான சேவைகளும் தொடர்ந்து அளிக்கப்படும். (அனிருத் D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/390 |