தங்கப்பத்திரங்கள் 2016-17 வரிசை II - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்கப்பத்திரங்கள் 2016-17 வரிசை II
செப்டம்பர் 22, 2016 தங்கப்பத்திரங்கள் 2016-17 வரிசை II இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசுடன் கலந்தாலோசித்து தங்கப் பத்திரங்கள் 2016-17 வரிசை-II வெளியீடு குறித்த விவரங்களை IDMD. CDD. No.462/14.04.050/2016-17, மற்றும் IDMD. CDD. No. 463/14.04.050/2016-17 சுற்றறிக்கைகளின் மூலம் அறிவித்தது. இந்த ஐந்தாவது தொகுதி தங்கப்பத்திரங்கள் செப்டம்பர் 01, 2016 முதல் செப்டம்பர் 09, 2016 வரை முதலீட்டிற்காக திறந்திருக்கும். இந்த முதலீட்டுப் பத்திரங்கள் செப்டம்பர் 23, 2016 அன்று வெளியிடப்படும். வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக ஏராளமான முதலீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் e-குபேர் கணினி முறைமையில் தளமேற்றம் செய்யவும், குறிப்பாக அஞ்சலகங்கள் சரிவர இவற்றை செயல்படுத்தவும், தங்கப் பத்திரங்கள் வழங்கப்படும் தேதி செப்டம்பர் 23, 2016-லிருந்து செப்டம்பர் 30, 2016-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையிலுள்ள இதர கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றமின்றி தொடரும். (அனிருதா D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/740 |