மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் உள்ள குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் (SBNs) (சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட நோட்டுகள்) - ஆர்பிஐ - Reserve Bank of India
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் உள்ள குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் (SBNs) (சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட நோட்டுகள்)
அறிவிப்பு எண் 331 ஜுன் 29, 2017 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் உள்ள குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் (SBNs) இந்திய அரசால் ஜுன் 20, 2017 தேதியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்ட குறிப்பிட்ட வங்கி நோட்டுகளின் - சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட (வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்செய்யப்பட்ட) நோட்டுகளின் விதிகள் 2017 (நகல் இணைக்கப்பட்டுள்ளது)-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கவும். அதன்படி, பாரா 2-ல் உள் விதிமுறைகளின்படி, நவம்பர் 10-14, 2016 வரையான தேதிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை கீழே குறிப்பிட்டபடி ஏற்றுக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்ஙனம் (P. விஜயகுமார்) இணைப்பு – மேலே குறிப்பட்டபடி |