காசோலை வடிவங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி ரேமாதிரியானவையாக ஆக்குதல் - ஆர்பிஐ - Reserve Bank of India
காசோலை வடிவங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி ரேமாதிரியானவையாக ஆக்குதல்
RBI/2009-2010/503 ஜுன் 22, 2010 தலைவர்/நிர்வாக இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரி அன்புடையீர், காசோலை வடிவங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி ஒரேமாதிரியானவையாக ஆக்குதல் மேற்குறிப்பிட்ட பொருள் குறித்த சுற்றறிக்கை எண் DPSS.CO.CHD.No.1832/ 04.07.05/2009-2010, பிப்ரவரி 22, 2010 தேதியிட்டதை கவனிக்கும்படியும் அதிலும் குறிப்பாக, காசோலைகளில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களைத் தவிர்த்தல் குறித்த பிற்சேர்க்கையிலுள்ள பத்தி எண் 1.8ஐப் பார்வையிடும்படி கேட்டுக்கொள்கிறோம். இவற்றின் சட்டரீதியான ஏற்பு தன்மை அமல்படுத்தும் தேதி ஆகியவை குறித்து வங்கி மற்றும் பொதுமக்களிடமிருந்து விளக்கங்கள் கோரி குறிப்புகள் வந்துள்ளன. காசோலைகளில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களைத் தவிர்த்தல் பற்றிய விதிகள் குறித்து பின்வருமாறு:
இதற்கான விதிகள் டிசம்பர் 2010லிருந்து நடைமுறைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவை குறித்த அறிவூட்டி, விழிப்புணர்வு அளிக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. இதனால் இடையூறுகளின்றி சுலபமாக இதை நடைமுறைப்படுத்த முடியும். சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர விவரங்கள் குறித்து இந்தியவங்கிகள் சங்கம் மற்றும் இந்திய தேசிய செலுத்துதல் குழுமம் ஆகியவை தனியே தகவல்கள் அனுப்பிவிடும். தங்களது உண்மையுள்ள (அருண் பஸ்ரிகா) |