RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78443450

உங்கள் வாடிக்கையாளரை அறிதலின் (KYC) வழிகாட்டுதல்கள் சம்பளம் வாங்கும் பணியாளர்கள்

RBI/2010-2011/307
RPCD.CO.RCB.AML.BC.No.37/07.40.00/2010-11

 டிசம்பர் 10, 2010

அனைத்து மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின்
தலைமை நிர்வாகிகள்

அன்புடையீர்,

உங்கள் வாடிக்கையாளரை அறிதலின் (KYC) வழிகாட்டுதல்கள்
சம்பளம் வாங்கும் பணியாளர்கள்

எங்களின் பிப்ரவரி 18, 2005 தேதியிட்ட RPCD. AML.BC.No.80/07.40.00/2004-05 எண்ணுள்ள தொகுப்புச்சுற்றறிக்கையுடனுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிதலின் (KYC) வழிகாட்டுதல்கள் மற்றும் கருப்புப் பணப்புழக்கத்தைத் தடுக்கும் முறைகள் குறித்தவற்றின் பிற்சேர்க்கை IIஐப் பார்க்கவும். அதில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கிட, வாடிக்கையாளரை மற்றும் முகவரியை அடையாளம் காண்பதற்கு ஏற்புடைய நம்பத்தகுந்த ஆவணங்களின் தன்மை, வகை மற்றும் தகவல் ஆகியவை குறித்த ஒரு பட்டியல் தரப்பட்டுள்ளது.

2. சம்பளம் வாங்கும் பணியாளர்கள், அவர்தம் வங்கிக்கணக்குகளைத் தொடங்கும்போது, அவர்களுக்குப்  பணி வழங்கியவரின் சான்றிதழ் அல்லது கடிதத்தை மட்டுமே அவர்களின் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றாக சில வங்கிகள் உங்கள் வாடிக்கையாளரை அறிதலின் நோக்கத்தின்பொருட்டு ஏற்றுக் கொள்கின்றன. இது எங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கம் தவறான பயன்பாட்டிற்கும், மோசடிக்கும் வழிவகுக்கும்.  ஆகவே வங்கிகள், பெரிய நிறுவனங்கள், புகழ்பெற்ற குழுமங்கள், அமைப்புகள் அளிக்கும்  சான்றிதழ்களை மட்டுமே நம்பிடவேண்டும். மேலும் இத்தகு கடிதம்/ சான்றிதழ் அளித்திட அந்நிறுவனங்கள் நியமித்துள்ள உரிய தகுதியுடைய அதிகாரிகளையும் அறிந்திருக்கவேண்டும்.  மேலும், கருப்புப் பணப்புழக்கத்தைத் தடுக்கும் விதிகளின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக ரீதியாக மதிப்புடைய சான்று ஆவணங்களாகக் கருதப்படும். (உம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமானவரிக் கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை) ஏதேனும் ஒன்றினை அல்லது நுகர்வோர் பயன்பாட்டு ரசீதுகள்(உங்கள் வாடிக்கையாளரை அறிதல் கோட்பாட்டின் கீழுள்ள) ஏதேனும் ஒன்றை பணி வழங்கியவரின் சான்றிதழ்/ கடிதத்தைத் தவிரவும் கூடுதலாக அளிக்கும்படி வங்கிகள், குழுமங்கள்/நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோரின் கணக்குகளைத் தொடங்கும்போது வலியுறுத்தலாம்.

3. இந்த வழிகாட்டுதல்கள் வங்கிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1949 பிரிவு 35Aன் மற்றும் கருப்புப் பணப்புழக்க தடுப்புச் சட்ட விதிகள் 2005 (பரிவர்த்தனைகளின் மதிப்பு மற்றும் தன்மையைக் குறித்து பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் இவற்றைப் பராமரிப்பதற்குரிய செயல்முறை மற்றும் வழி, தகவல் அளித்திட ஆகும் நேரம், வங்கிக் குழுமங்களின் வாடிக்கையாளர் அடையாளம் குறித்த ஆவணங்களை சோதித்து அறிதல் மற்றும் அவற்றின் பராமரிப்பு, நிதி நிறுவனங்கள் மற்றும் இடையீட்டாளர்கள்) மேற்குறிப்பிட்டவை குறித்த விதிகளின் கீழும் வழங்கப்படுகின்றன.  இவற்றிற்கு புறம்பாகவோ அல்லது கட்டளைகளைப் பூர்த்தி செய்யாமலோ இருப்பின் சட்டப்படி விதிக்கப்படும் அபராதங்களுக்கு உள்ளாக நேரிடும்.

4. பெற்றமைக்கான ஒப்புதலை எங்கள் பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்பவும்.

தங்கள் உண்மையுள்ள

(B.P. விஜயேந்திரா)
தலைமைப்பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?