பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள்
RBI/2009-10/218 நவம்பர் 13, 2009 அனைத்து மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் அன்புடையீர், பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள் RPCD.CO.RF.BC.No.95/07.38.01/2006-07, 2007 மே 18 தேதியிட்ட எங்களது சுற்றறிக்கையின் பத்தி ஐந்தைப் பார்க்கவும். அதன்படி வங்கிகள் தங்களது வங்கி/கிளையின் அடையாளக் குறியீட்டை பாதுகாப்புப் பெட்டகங்களின் சாவிகளில் பொறித்து வைப்பதால் அதிகாரிகள் அந்த சாவிகளை அடையாளங் கண்டுகொள்வது எளிதாகிறது. 2.ஏற்கனவே வாடகைக்கு விடப்பட்ட பாதுகாப்புப் பெட்டகங்களில் இதை அமல் படுத்துவதில் உள்ள பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின், நிதியமைச்சகத்தின் மத்திய பொருளாதார பிரிவு தெரிவித்துள்ள ஆலோசனையின்படி, பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்களின் உரிமையாளர்கள் அவர்களது பெட்டகங்களைப் பயன்படுத்த வரும் நேரத்தில், அதற்குரிய சாவிகளில் வங்கி/கிளையின் அடையாளக் குறியீட்டை பொறித்திடலாம். மேலும் தொலைபேசி வாயிலாகவும் அல்லது தபால் மூலமாகவும் இது குறித்த விவரத்தைத் தெரிவித்திடலாம். 3.ஆகவே, பாதுகாப்புப் பெட்டகங்களை இயக்கவரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் சாவிகளில் வங்கி/கிளையின் அடையாளக்குறியீட்டை பொறித்திட, வங்கிக் கிளைகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இதற்காக, பாதுகாப்பு பெட்டக விற்பனை நிறுவனத்தின் உதவியோடு, தேவையான இயந்திர வசதிகளை வங்கியியேலே ஏற்படுத்திடலாம். அனைத்து பாதுகாப்பு பெட்டக உபயோகிப்பாளர்களுக்கும் தங்களது பாதுகாப்பு பெட்டக சாவிகளில் வங்கிக் கிளைகள் தங்களது பெயர்களை பொறித்துக்கொள்ளுவதுபற்றி அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பு பெட்டகத்தை வைத்திருப்பவரின் முன்னிலையிலேயே அடையாளக் குறியீட்டை சாவிகளில் பொறிப்பதை உறுதி செய்ய வேண்டும். 4.சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்திற்கு, நடவடிக்கை எடுத்தமைக்கான அறிக்கையை அளிக்கவும். தங்கள் அன்புள்ள (R.C. சாரங்கி) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: