பட்ஜ் பட்ஜ் நங்கி கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், 63 மகாத்மா காந்தி சாலை, பட்ஜ் பட்ஜ், செளத் 24 பர்கானாஸ், கொல்கத்தா – 700 137, மேற்கு வங்கம் - அபராதம் விதிக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
பட்ஜ் பட்ஜ் நங்கி கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், 63 மகாத்மா காந்தி சாலை, பட்ஜ் பட்ஜ், செளத் 24 பர்கானாஸ், கொல்கத்தா – 700 137, மேற்கு வங்கம் - அபராதம் விதிக்கப்பட்டது
அக்டோபர் 16, 2019 பட்ஜ் பட்ஜ் நங்கி கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், 63 மகாத்மா காந்தி சாலை, பட்ஜ் இந்திய ரிசர்வ் வங்கி, பட்ஜ் பட்ஜ் நங்கி கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், 63 மகாத்மா காந்தி சாலை, பட்ஜ் பட்ஜ், செளத் 24 பர்கானாஸ் கொல்கத்தா, 700 137, மேற்கு வங்கம் நிறுவனத்திற்கு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949(கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) இன் பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அக்டோபர் 16, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949(கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 20ஐ மீறியதற்காகவும் அர்பன் கோஆப்ரேடிவ் பேங்க்களின் எக்ஸ்போஷர் விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான /பிற கட்டுப்பாடுகள் குறித்து பாரா 5.1.1 மற்றும் பாரா 5.1.3 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஜூலை 01, 2015 தேதியிட்ட Master Circular DCBR.CO.BPD (PCB) No.13/13.05.000/2015-16 இன் உத்தரவுகள் / வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காகவும் அக்டோபர் 16, 2019 அன்று ரூ. 1.00 லட்சம்(ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, மார்ச் 31, 2017 நிலவரப்படி வங்கியில் நடைபெற்ற ஆய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மார்ச் 25, 2019 அன்று வங்கியிடம் அளித்த விளக்கம் கேட்கும் அறிவிப்பிற்கு வங்கியும் அதன் பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை கருத்தில் கொண்டு, வங்கியின் பதில் மற்றும் இது தொடர்பான அடுத்தடுத்த பதில்களை பரிசீலித்தபின், மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/965 |