கரீம்நகர் கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், கரீம்நகர், தெலுங்கானா மீது அபராதம் விதிக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
கரீம்நகர் கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், கரீம்நகர், தெலுங்கானா மீது அபராதம் விதிக்கப்பட்டது
தேதி: பிப்ரவரி 13, 2019 கரீம்நகர் கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், கரீம்நகர், தெலுங்கானா மீது அபராதம் விதிக்கப்பட்டது வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 46 இன் துணைப்பிரிவு 4 உடன் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்),இணைந்த பிரிவு 47A (1) (c) ன் விதிகளின் கீழ் கரீம்நகர் கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட் கரீம்நகர், தெலுங்கானா மீது) இணக்க அறிக்கை சமர்ப்பிப்பதில் இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள்/வழிகாட்டுதல்கள்/அறிவுறுத்தல்களை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு ஒரு விளக்கம் கேட்கும் அறிவிப்பை வெளியிட்டது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. வழக்கின் உண்மைகளையும், இந்த விஷயத்தில் வங்கியின் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்த பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/1927 |