மஹிளா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட், அகமதாபாத் (குஜராத்) (பட்டியலிடப்படாத . U.C.B.) - அபராதம் விதிக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
மஹிளா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட், அகமதாபாத் (குஜராத்) (பட்டியலிடப்படாத . U.C.B.) - அபராதம் விதிக்கப்பட்டது
தேதி: மார்ச் 20, 2019 மஹிளா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட், அகமதாபாத் (குஜராத்) (பட்டியலிடப்படாத . U.C.B.) - அபராதம் விதிக்கப்பட்டது இந்திய ரிசர்வ் வங்கி தி மஹிளா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் அகமதாபாத் (குஜராத்) (பட்டியலிடப்படாத யுசிபி - U.C.B.) மீது வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 47 A (1) உடன் பிரிவு 46 (4) உடன் இணைந்த விதிகள் (AAACs) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இயக்குநர்கள், உறவினர்கள் மற்றும் நிறுவனங்கள் / அவர்களின் ஈடுபாடுள்ள கம்பெனிகள் மற்றும் கே.ஒய்.சி / ஏ.எம்.எல் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் பிணையில்லாத முன்பணம், கடன்கள் மற்றும் முன்பணம் குறித்த உச்சவரம்பு தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக ரூ 10.00 லட்சம் (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது அகமதாபாத்தில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள மூத்த அதிகாரிகளின் குழுவில் தனிப்பட்ட சமர்ப்பிப்புகளைச் செய்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது . அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/2249 |