சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சூரி, மேற்கு வங்காளத்திற்கு வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டப்பிரிவு எண் 35 (A) ன்கீழ் சட்டப்பிரிவு எண் 56 உடன்இணைந்து வழங்கப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய உத்தவுகள் நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சூரி, மேற்கு வங்காளத்திற்கு வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டப்பிரிவு எண் 35 (A) ன்கீழ் சட்டப்பிரிவு எண் 56 உடன்இணைந்து வழங்கப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய உத்தவுகள் நீட்டிப்பு
ஜூலை 10, 2017 சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சூரி, மேற்கு இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால் சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சூரி, மேற்கு வங்காளத்திற்கு வழங்கப்பட்ட மார்ச் 28, 2014 தேதியிட்ட ,(டிசம்பர் 30, 2016 தேதியிட்டதை சேர்த்துப் படிக்கவும்) உத்தரவின் செயல்பாட்டுக் காலத்தைப் பொதுநலன் கருதி நீட்டிப்பது அவசியம் என்று கருதுகிறது. ஆகவே வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A) (1)-ன்கீழ் (சட்டப்பிரிவு எண் 56 உடன்இணைந்து) இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, பின்வருமாறு உத்தரவிடுகிறது. சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சூரி, மேற்கு வங்காளத்திற்கு வழங்கப்பட்ட மார்ச் 28, 2014 தேதியிட்ட உத்தரவு அவவ்ப்போது திருத்தப்பட்டு அதன் செயல்பாட்டுக் காலம் கடந்தமுறை டிசம்பர் 30, 2016 தேதியிட்ட உத்தரவின் மூலம் ஜூலை 06, 2017 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த உத்தரவின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு மறுஆய்வுக்குட்பட்டு ஜூலை 07, 2017 முதல் ஜனவரி 06,2018 வரை நீட்டிக்கப்படுகிறது. அவவ்ப்போது திருத்தப்படும் இந்த உத்தரவின் இதர கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றமின்றி இருக்கும். இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் உரிமத்தை ரத்துசெய்துவிட்ட தாகக் கருதக்கூடாது. நிதிநிலை மேம்படும்வரை இந்த வங்கி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கிவர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.சூழ்நிலைக்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்கள் செய்யக்கருதிடும். (ஜோஸ் ஜெ. கட்டூர்) பத்திரிக்கை வெளியீடு: 2017–18/89 |