முன்னர் வெளியிடப்பட்ட துயர்நீக்கப் பத்திரங்களை மாற்றுதல் - ஆர்பிஐ - Reserve Bank of India
முன்னர் வெளியிடப்பட்ட துயர்நீக்கப் பத்திரங்களை மாற்றுதல்
முன்னர் வெளியிடப்பட்ட துயர்நீக்கப் பத்திரங்களை மாற்றுதல்
Ref. No. CO. DT. /13.01.272/2002-03 ஜுலை 17, 2002
மண்டல இயக்குநர்கள், கிளை அலுவலகங்கள்
ஸ்டேட் வங்கி / அதனுடன் சேர்ந்த வங்கிகள்
18 நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள்
4 தனியார் வங்கிகள் (SCHIL)
அன்புடையீர்,
முன்னர் வெளியிடப்பட்ட துயர்நீக்கப் பத்திரங்களை மாற்றுதல்
முதிர்வு நிலையை அடையாத, 2002 மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் வெளியிடப்பட்ட துயர் நீக்கப் பத்திரங்களை, இரண்டாவது சந்தையில் வாங்குவது என்பது, புதிய முதலீடாகக் கருதாமல் , முதலீட்டாளர் ஒருவருக்கு, ஆண்டு ஒன்றுக்கு, முதலீட்டுக்கான உச்ச வரம்பான ரூ. 2 லட்சத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்படக் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். எனவே முதலீட்டார்கள் தங்களது நபர் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2 லட்சத்திற்கான முதலீடு என்ற வரம்பையும் தாண்டி எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும், இரண்டாவது சந்தையில், முன்னர் வெளியிட்ட துயர்நீக்கப் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். கிளைகளில் தேங்கிக் கிடக்கும் மாற்றுதலுக்கான கோப்புகள் உரிய வகையில் தீர்வு காணப்படலாம்.
உண்மையுள்ள,
ஒப்பம்
ஆர். சி. தாஸ்
பொது மேலாளர்