இந்திய ரிசர்வ் வங்கி, தும்கூர் தானிய வியாபாரிகள் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், கர்நாடகா மீது அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, தும்கூர் தானிய வியாபாரிகள் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், கர்நாடகா மீது அபராதம் விதிக்கிறது
மே 04, 2018 இந்திய ரிசர்வ் வங்கி, தும்கூர் தானிய வியாபாரிகள் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், கர்நாடகா மீது அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, தும்கூர் தானிய வியாபாரிகள் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், கர்நாடகா மீது ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் நெறிமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, (Paragraph 3.2.2.IV.D of RBI’s Master Circular DBR AML BC No. 15/14.01.001/ 2015-16 dated July 01, 2015) இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவு / வழிகாட்டுதல்களின் “உங்கள் வாடிக்கையாளர்களை அறிதல்“ நெறிமுறைகள் குறித்த வழிமுறைகள் மற்றும் கருப்புப் பண மோசடி, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது, PMLA, 2002-ன் கீழ் வங்கிகளின் கடமைகளைத் தீர்ப்பது ஆகியவற்றை மேற்படி வங்கி பின்பற்றாத காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்து மூலம் பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், அந்த விஷயத்தில் வங்கியளித்த பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/2912 |