யு.பி. சிவில் செக்ரெடேரியேட் ப்ரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ (யு.பி.) - அபராதம் விதிக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
யு.பி. சிவில் செக்ரெடேரியேட் ப்ரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ (யு.பி.) - அபராதம் விதிக்கப்பட்டது
ஜூலை 11, 2019 யு.பி. சிவில் செக்ரெடேரியேட் ப்ரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ இந்திய ரிசர்வ் வங்கி யு.பி. சிவில் செக்ரெடேரியேட் ப்ரைமரி கோஆப்ரேட்டிவ் வங்கி லிமிடெட், லக்னோ (உ.பி.)க்கு ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்தும்), இன்வெஸ்ட்மெண்ட் போர்ட்ஃபொலியோ (முதலீட்டு இலாகா) வின் ஒரே நேரத்தில் தணிக்கை செய்வது , வங்கிகளுக்கு இடையேயான மொத்த வெளிப்பாடு மற்றும் கவுண்டர் பார்ட்டி வரம்பில் விவேக விதிமுறைகள், கடன் தகவல் நிறுவனங்களில் உறுப்பினர், உங்கள் வாடிக்கையாளர் அறிந்து கொள்ளுங்கள் வழிகாட்டுதல்கள், ஆர் பி ஐ ஆய்வு அறிக்கைக்கு இணக்க அறிக்கை சமர்ப்பிக்காதது மற்றும் முந்தைய ஆண்டில் நிகர (திரட்டப்பட்ட) இழப்பு இருந்தபோதிலும் நன்கொடை வழங்குதல் ஆகிய ஆர் பி ஐ யின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வங்கி யு.பி. சிவில் செக்ரெடேரியேட் ப்ரைமரி கோஆப்ரேட்டிவ் வங்கி லிமிடெட் க்கு வழங்கிய விளக்கம் கோரல் அறிவிப்புக்கு வங்கியும் எழுத்துப்பூர்வமாக பதில் சமர்ப்பித்தது. எழுத்துப்பூர்வமாக வங்கி அளித்த பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் பொது சமர்ப்பிக்கப்பட்டவையின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்த பின்னர் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/119 |