2006-07 ம் ஆண்டுக்கான ஆண்டுக்கொள்கை அறிவிப்பு - நியாயமான பழக்கவழக்கங்களுக்கான் நெறிமுறைகள் - வங்கிக்கட்டணங்கள் தகவல் அறிவிப்பு – நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
2006-07 ம் ஆண்டுக்கான ஆண்டுக்கொள்கை அறிவிப்பு - நியாயமான பழக்கவழக்கங்களுக்கான் நெறிமுறைகள் - வங்கிக்கட்டணங்கள் தகவல் அறிவிப்பு – நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள்
RBI/2005-06/392
UBD(PCB)/Cir.54/09.39/000/2005-06 மே 26, 2006
அனைத்து தொடக்கநிலை (நகர்புறக்) கூட்டுறவு வங்கிகளின்
நிர்வாக அதிகாரிகளுக்கு
அன்புடையீர்,
2006-07 ம் ஆண்டுக்கான ஆண்டுக்கொள்கை அறிவிப்பு -
நியாயமான பழக்கவழக்கங்களுக்கான் நெறிமுறைகள் -
வங்கிக்கட்டணங்கள் தகவல் அறிவிப்பு – நகர்ப்புறக் கூட்டுறவு
வங்கிகள்
ஆண்டு 2006-07 க்கான் ஆண்டுக்கொள்கை அறிவிப்பின் (இத்துடன் நகல் இணைக்கப்பட்டுள்ளது) பாரா 162 ஐப் பார்வையிடுக.
2. வங்கிச்சேவைக்கான கட்டணங்களை வகுத்துரைக்கும் முடிவு நடைமுறையிலுள்ள உத்தரவுகளிந் படி, அந்தந்த தனிவங்கிகளின் குழுமத்தின் தனியதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது. வங்கிகள் சேவைக்கட்டணங்களைத் தீர்மானிக்கும்போது, அவை நியாயமானவையாக, அந்த சேவைக்கான செலவுக்கும் பொருத்தமுள்ளவையாக இருக்கும்படி உறுதிசெய்து கொண்டு, குறைந்த மதிப்புள்ள வாடிக்கையாளர்கள் / குறைந்த நடவடிக்கையுள்ள கணக்குகள் வைத்திருப்போர் பாதிக்கப்படாத வகையில் கட்டணங்களை விதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. நியாயமில்லாத தெளிவில்லாத வகையில் மறைவாக வங்கிகளால் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணங்கள் குறித்த முறையீடுகளோடு தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பு வடிவிலான செயலமைப்புத் திட்டம் போதுமானதன்று என்று குறிப்பிட்டுக்காட்தடும் வண்ணம் பல முறையீடுகள் தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு வருகின்றன. பின்னிணைப்பு 2ல் கண்டுள்ள படிவங்களின் வடிவில், இணையதளத்தில் தாங்கள் வசூலிக்கும் பலதரப்பட்ட சேவைக்கட்டணங்களின் விவரங்களைத் தந்தும், அவ்வப்போது புதுபித்தும் வங்கிச்சேவையில் ஒளிவுமறைவு அற்ற தன்மையைக் காட்டும்படி அட்டவணையிட்ட வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். அளிக்கப்படும் பொருகளுக்கு ஏற்றப்படி படிவங்கள் மாற்றியமைக்கப்படலாம்.
4. அட்டவணை II இல் கண்டுள்ள சில குறிப்பிட்ட சேவைகளுக்கான கட்டணங்களின் தகவலகளை அறிவிக்கும் படி அட்டவணையிடப்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளோடு இதர நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன். இது வட்டார மொழிகளிலும் வெளியிடப்படலாம்.
5. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அறிவிக்க வசதியாக இருக்கும் பொருட்டு ஜூன் 15, 2006 க்குள் பின்னிணைப்பு II ல் கண்டுள்ளபடி தறபோது நடைமுறையிலுள்ள வங்கிச்சேவைக்கான் கட்டணங்களை அட்டவணையிடப்பட்ட நகர்புற கூட்டுறவு வங்கிகள் அனுப்பி வைப்பார்களாக. தகவல்களைப் புதுப்பிக்கும் பொருட்டு அவ்வப்போது சேவைக் கட்டணங்களில் செய்யப்படும் மாற்றங்களையும் தெரிவிப்பார்களாக.
நம்பிக்கையுள்ள
N.S. விஸ்வநாதன்
துணைப்பொது மேலாளர் (பொறுப்பு)
ஆண்டு 2006-07 (ஏப்ரல் 2006)க்கான் ஆண்டுக் கொள்கை
அறிவிப்பு –
நியாயமான பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகள் -
வங்கிக்கட்டணங்களில் நேர்மை
நியாயமில்லாத, தெளிவில்லாத வகையில் மறைவாக வங்கிகளால் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணங்கள் குறித்த முறையீடுகளோடு தற்போது நடைமுறையிலுள்ள அமைப்பு வடிவிலான் செயலமைப்புத்திட்டம் போதுமானதன்று என்று குறிப்பிட்டுக் காட்டும் வண்ணம் பல முறையீடுகள் தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு வருகின்றன. வங்கிச்சேவையில் நியாயமான பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ள பின்வருமாறு உத்தேசிக்கப்படுகிறது.
‘ ரிசர்வ் வங்கியால் அங்கிகரிக்கப்பற்ற படிவத்தில், பலவிதமான சேவைக்கட்டணங்களின் தகவல்களை தங்கள் அலுவலகங்கள், கிளைகள் மற்றும் இணையகளங்களில் வெளியிட்டு அவ்வப்போது மாற்றங்களையும் வங்கிகள் தெரிவிக்கவேண்டியது சட்டப்படி கட்டாயமானதாக ஆக்கப்படும்.