நகர்புற கூட்டுறவு வங்கிகள் - காசோலை சேகரிப்புக் கொள்கை
RBI/2007-08/281 ஏப்ரல் 15, 2008 தலைமை நிர்வாக அதிகாரி அன்புடையீர், பொது சேவைகளுக்கான நடைமுறை மற்றும் செயல்பாட்டு தணிக்கைக்குழ"ு ரிசரவ் வங்கி வங்கிகளுக்கு கீழ்க்கண்ட விஷயங்கள் குறித்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறது என்பதனை நீங்கள் அறிவீர்கள் அவை, (i) உள்ளூர்/வெளியூர் காசோலைகளை உடனடியாக வரவு வைத்தல் (ii) உள்ளூர்/ வெளியூர் காசோலைகளை வசூலித்துப் பணமாக்குவதற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம் (iii) தாமதமாக வசூலிக்கப்படுவதற்காக செலுத்த வேண்டிய வட்டிவிகிதம். இது சமபந்தமான உத்தரவுகள் வாடிக்கையாளர் சேவைக்கான நமது தொகுப்புச் சுற்றறிக்கை UCBs vide UBD.BPD.(PCB)MC No.8/09.39.000/2007-08, ஜூலை 4, 2007ல் உள்ளது. இவ்விஷயத்தில் அதன் முக்கிய உத்தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2. (i) உள்ளூர்/வெளியூர் காசோலைகளை உடனடி வரவு வைத்தல்: ஒரு தனிப்பட்ட கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் சமர்ப்பிக்கும் உள்ளூர்/வெளியூர் காசோலைகளுக்கு ரூ7500/- வரை உடனடி வரவு வைத்திடுமாறு பட்டியலிடப்பட்ட நகர கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கு நல்ல முறையில் நடத்தப்படுகிறதா? என்பது போன்ற சில நிபந்தனைக்களுக்குட்பட்டது. (ii) உள்ளூர்/ வெளியூர் உபகரணங்கள் பணம் வசூலிப்பதற்கான காலவரையறை: எம்ஐசிஆர்(MICR- Magnetic Ink Character Recognition) காந்தமை காசோலை தீர்வு முறையில் நான்கு மகா நகர மையங்களில் வெளியூர் காசோலைகளில் பணம் வசூலிப்பதற்கான கால வரையறையை வங்கிகள் நிர்ணயிக்கவேண்டும். இதே போன்று மாநில தலைநகரங்கள், 100 வங்கி அலுவலகங்களுக்குமேல் உள்ள மையங்கள் மற்றும் உள்ளூர் காசோலைகள் ஆகியவற்றிற்கும் கால வரையறை நிர்ணயிக்கப்படவேண்டும். (iii) தாமதமாக பணம் வசூலிக்கப்படுவதற்கு வட்டி அளிக்கப்படுவது வெளியூர் காசோலைகள் மற்றும் இதர உபகரணங்கள் ஆகியவற்றிற்கு பணம் வசூலிக்க தாமதம் ஏற்படும் பட்சத்தில் வங்கிகள் சேமிப்பு வங்கி விகிதத்தில் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் வட்டி வழங்கவேண்டும். வெளியூர் காசோலைகள் அல்லது உபகரணங்களை அந்தந்த வங்கியின் வெளியூர் கிளைகள் மீது அல்லது வேறு வங்கிகளின் கிளைகள் மீது எடுக்கப்பட்டு, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படாமல்/வருபவைகள் சேர்க்கப்படாமல் இருந்தால் அல்லது உபகரணங்கள் அளிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்படாவிட்டால் போன்ற சூழல்கள் ஆகும். வெளியூர் உபகரணங்களுக்கு பணம் வசூலிக்கும் பொழுது 10/14 தினங்களுக்குமேல் காலதாமதம் ஏற்படும்பொழுது அந்த காலகட்டத்திற்குரிய நிரந்தர வைப்பிற்கு அளிக்கப்படும் வட்டியை வங்கிகள் அளிக்கலாம். இது தவிர நிரந்தர வைப்பிற்கு அளிக்கப்படும் வட்டிக்கு அதிகமாக 2% வெளியூர் உபகரணங்களுக்கு பணம் வசூலிக்க அதீத காலதாமதம் ஆனால் அளிக்கவேண்டும். 3. கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயல்முறை, நடைமுறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தர மாறுதல்கள் ஆகியவை காரணமாக ஒரே ஒரு தொகுப்பு விதிகள் மட்டும் பரிந்துரைக்கப்படுவது, பொருத்தமாக இருக்காது. பல்வேறு நாடுகளில் காசோலைகளின் பணம் வசூலிப்பு விஷயத்தில் தங்களுக்கென ஒரு கொள்கையையும்/நடைமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது மேலும் வாடிக்கையாளரின் உரிமைகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் செய்யவேண்டியவை பற்றியும் தெரிவிக்கவேண்டியுள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிகளைவிட, வங்கிகளுக்கிடையே உள்ள போட்டியின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு காசோலைகளிலிருந்து விரைவாக பணம் கிடைத்திட வாய்ப்பிருக்கிறது. 4. மேற்கண்டவைகளைக் கருத்தில்கொண்டு தனிப்பட்ட வங்கிகள் காசோலை தீர்வுகளுக்கான ஏற்பாடுகளில், தொழில்நுட்பத்திறன், முறைமைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளடக்கிய விரிவான மற்றும் வெளிப்படையான கொள்கையை ஏற்படுத்திட வேண்டும். மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகள் மற்றும் திறன்களை மறுபரிசீலனை செய்து, பணம் வசூலிப்பதற்கான காலகட்டத்தை குறைத்திட வேண்டும். சிறு முதலீட்டாளர்களின் நலன்கள் முழுவதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திட முழு கவனம் செலுத்த வேண்டும். இந்திய வங்கிகளின் சங்கத்தின் மாதிரி கொள்கையோடு ஒத்து நின்று மேலும் வைப்புக் கொள்கையுடன் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கொள்கை இவ்விஷயத்தில் வகுக்கப்பட வேண்டும்(உடனடி பார்வைக்கு நகல் இணைக்கப்பட்டுள்ளது). வங்கிகள் தாங்களே வகுத்துக்கொண்ட தரநியதிகளை பின்பற்றமுடியாமல் ஏற்படும் தாமதங்களுக்கு வங்கிகள் வட்டி அளிக்க வேண்டிய பொறுப்பை அக்கொள்கையில் தெளிவாக தெரிவித்திட வேண்டும். தேவை ஏற்படும்போது, நஷ்ட ஈடாக வட்டி அளிப்பதை, வாடிக்கையாளர் கேட்காமலேயே கொடுத்திட வேண்டும். எப்படியிருந்தபோதிலும் வாடிக்கையாளர் முன்பிருந்த நிலையைவிட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது. 5. தற்போதுள்ள எங்களது உத்தரவுகளுடன் கொள்கையை வங்கியின் குழுமத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். குழுவின் குறிப்பிட்ட அனுமதி கொள்கையின் நியாயமான தன்மை மற்றும் எங்களது வழிகாட்டுதல்களுடன் உள்ளது என்பதற்கு வழங்கிட வேண்டும். 6. வங்கிகள், அமலாக்கத்திற்கு முன்பாக, காசோலையிலிருந்து பணம் வசூலிக்கும் உங்களது கொள்கையின் பிரதியை இந்த துறைக்கும் மற்றும் மேற்குறிப்புடன் மற்றொரு பிரதியை தலைமை பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி, கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் துறை, மைய அலுவலகம், மும்பை என்ற முகவரிக்கு எங்களது ஆய்வுக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பிடவேண்டும். 7. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும். தங்கள் உண்மையுள்ள |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: