RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78503844

யுனிவர்சல் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், மஞ்சேரியல், தெலங்கானா
மீது அபராதம் விதிக்கப்படுகிறது

மே 09, 2018

யுனிவர்சல் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், மஞ்சேரியல், தெலங்கானா
மீது அபராதம் விதிக்கப்படுகிறது

யுனிவர்சல் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், மஞ்சேரியல், தெலங்கானா மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 0.50 லட்சம் (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை மேற்படி வங்கி பின்பற்றாமல் இவ்வங்கியின் இயக்குநர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் கடன் மற்றும் முன்பணம் வழங்கிய காரணத்திற்காக, அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2948

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?