ATM-களைப் பயன்படுத்துதல் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி - ஆர்பிஐ - Reserve Bank of India
78489694
வெளியிடப்பட்ட தேதி நவம்பர் 14, 2016
ATM-களைப் பயன்படுத்துதல் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி
நவம்பர் 14, 2016 ATM-களைப் பயன்படுத்துதல் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி அனைத்து வங்கிகளும், வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தில் மேற்கொள்ளும் அனைத்து ATM பரிவர்த்தனைகளுக்கும் (நிதிசார் - நிதிசாரா) தத்தம் வங்கி ATM-ல் இருந்தாலும் அல்லது பிற வங்கி ATM-ல் இருந்தாலும், எத்தனை முறை நடத்தப்பட்டாலும் அவற்றிற்குக் கட்டணத்தை வங்கிகள் தள்ளுபடி செய்திட வேண்டுமென்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று முடிவு செய்துள்ளது. ATM பயன்பாட்டிற்கான இந்தக் கட்டணத் தள்ளுபடி என்பது நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை மறுபரிசீலனைக்குட்பட்டு அமலில் இருக்கும். (அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016-17/1199 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?