ஏடிஎம்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி - ஆர்பிஐ - Reserve Bank of India
ஏடிஎம்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி
அறிவிப்பு எண் 132 நவம்பர் 14, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் ஏடிஎம்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி ஆகஸ்டு 14, 2014 தேதியிட்ட சுற்றறிக்கை No. DPSS. CO. PD. No. 316,/,02.10.002,/,2014-15-ஐப் பார்க்கவும். இது சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி ஏடிஎம்கள் மற்றும் இதர வங்கி ஏடிஎம்களில் செய்யும் பரிவர்த்தனைகளில் கட்டணமில்லாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைப் நியாயப்படுத்துதல் பற்றியதாகும். மேலும், ரூ. 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்த நவம்பர் 08, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை எண் DCM (Plg) No. 1226/10.27.00/2016-17 மற்றும் ஏடிஎம்கள் மூடுதல் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் டிசம்பர் 30, 2016 வரை ரத்து பற்றிய நவம்பர் 08, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை எண் RBI/2016-17/111/DPSS.CO.PD./02.10.002/2016-17-ஐப் பார்க்கவும். 2. அனைத்து வங்கிகளும் அனைத்து ATM பரிவர்த்தனைகளுக்கும் (நிதிசார் - நிதிசாரா) அந்தந்த வங்கிகளின் ATM-களில் அல்லது பிற வங்கிகளின் ATM-களில் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தில் மேற்கொள்ளும் அனைத்து ATM பரிவர்த்தனைகளுக்கும் (நிதிசார் - நிதிசாரா) தத்தம் வங்கி ATM-ல் இருந்தாலும் அல்லது பிற வங்கி ATM-ல் இருந்தாலும், எத்தனை முறை நடத்தப்பட்டாலும் அவற்றிற்குக் கட்டணத்தை வங்கிகள் தள்ளுபடி செய்திட வேண்டுமென்று இது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 3. ATM பயன்பாட்டிற்கான இந்தக் கட்டணத் தள்ளுபடி என்பது நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை மறுபரிசீலனைக்குட்பட்டு அமலில் இருக்கும். 4. பட்டுவாடா மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007 (Act 51 of 2007)-ன் சட்டப்பிரிவு எண் 10 (2) மற்றும் 18-ன் கீழ் இந்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இங்ஙனம் (நந்தா S. தவே) |