RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78453556

அமெரிக்க டாலரில் குறிப்பிடப்பட்டுள்ள காசோலைகள் - பணம் வசூலிக்கும் நடைமுறைகளில் உள்ள மேம்பாடுகள் - நகர கூட்டுறவு வங்கிகள்

RBI/2008-09/350
UBD(PCB) Cir.No.33/16.26.00/2008-09                 

                       ஜனவரி 14, 2009

அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகள்
நகர கூட்டுறவு வங்கிகளின்
அங்கீகரிக்கப்பட்ட  முகவர் – I மற்றும் அங்கீகரிக்கப்பட்ட  முகவர் – II

அன்புடையீர்,

அமெரிக்க டாலரில் குறிப்பிடப்பட்டுள்ள காசோலைகள் பணம் வசூலிக்கும்
நடைமுறைகளில் உள்ள மேம்பாடுகள் நகர கூட்டுறவு வங்கிகள்

அமெரிக்க டாலரில் குறிப்பிடப்பட்டுள்ள காசோலைகள் பணம் வசூலிப்பதில் ஏற்படும் கால தாமதங்களைப் பற்றிய புகார்களின் எண்ணிக்கையை அடுத்து, அத்தகைய காசோலைகளுக்கு பணம் வசூலிப்பதில் ஏற்படும் கால அளவை குறைக்கும் வாய்ப்பினை அறிய, வங்கிகள் காசோலைகளிலிருந்து பணம் வசூலிக்க கடைபிடிக்கும் முறைகளைப் பற்றி, ரிசர்வ் வங்கி ஒரு கள ஆய்வு செய்தது.

2. அளிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட  முகவர் நகர கூட்டுறவு வங்கிகள், வாடிக்கையாளர் நட்பு சார்ந்த காசோலை பணம் வசூலிக்கும் ஏற்பாடுகளுக்கு கீழே விளக்கியுள்ளவாறு நடவடிக்கைகளைத் துவங்கலாம்:

  1. நகர கூட்டுறவு வங்கிகள் அமெரிக்க டாலருக்கான பணம் வசூலிக்கும் திட்டத்தை ஒளிவுமறைவின்றியும், தங்களது வழக்கமான  காசோலைக்கு  பணம் வசூலிக்கும் கொள்கையின் ஒரு அங்கமாகவும் வைத்திருத்தல் வேண்டும்.  காசோலைக்கு பணம் வசூலித்தலில் பலவித முறைகளையும் அதற்கான நேரம் மற்றும் கட்டணம் ஆகியவை சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டும்.
  2. இக்கொள்கை வங்கி கிளைகளின் அறிவிப்பு பலகையிலும்/இணைய தளத்திலும் பரவலாகவும் தெளிவாகவும் காட்டப்படவேண்டும்.
  3. மின்னணு முறையில் பணம் அளிப்பதன் வசதி உட்பட, தேவை, வசதி, கட்டணம் ஆகியவைகளை உள்ளடக்கிய வசூலிக்கும் முறை பற்றி வாடிக்கையாளருக்கு தகுந்த முறையில் தெரிவித்திட வேண்டும்.
  4. நகர கூட்டுறவு வங்கிகள் காசோலைக்கு பணம் வசூலிக்கும் கொள்கைகளை அவ்வப்போது மறு ஆய்வு செய்து அமெரிக்காவில் உள்ள காலத்தை குறுக்கும் செக் -21 வசதி, அதற்குரிய வங்கியில் நேரடி வைப்பு முறைமை உள்ளிட்ட, மேலும் விரைவான வழிகளை அறிமுகப்படுத்தவேண்டும்.
  5. கிளைகளிலிருந்து காசோலைகளை தொடர்பு வங்கிக்கு (Correspondent Bank – CB) அனுப்புதற்கு ஆகும் நேரத்தை குறைத்திட வாய்ப்புண்டு.  அதே நாளில் காசோலைகளை அனுப்புவதால் அனுப்பும் நேரம் 2லிருந்து 3 நாட்கள் குறைய வாய்ப்புண்து.  திறனும் நம்பகத்தன்மையும் கொண்ட கூரியர்/தபால் சேவை அனுப்பும் காலகட்டத்தை குறைத்திடும்.
  6. நகர கூட்டுறவு வங்கிகள் அனைத்துக் காசோலைகளையும் ஒரு சேவை மையத்தில் குவித்து அதன்மூலம் வடிவம் ஏற்படுத்துதல், குறைந்த கட்டமைப்பு கட்டணங்கள் இவற்றோடு அனுப்புதல்/வசூலித்தல் நேரத்தை குறைக்க முயலலாம்.
  1. அமெரிக்க டாலர் காசோலைகளை வசூலிப்பதற்கான சேவைக் கட்டணங்கள் நகர கூட்டுறவு வங்கிகளால் தீர்மானிக்கப்பட்டு அவர்களது அமெரிக்க டாலர் காசோலை வசூலிப்புக் கொள்கையின் ஒரு அங்கமாக இருக்கும்.
  2. வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை நகர கூட்டுறவு வங்கிகள் வட்டி கொடுக்கும். இந்த வட்டி சேமிப்பு வங்கி அடிப்படையில் இருக்கும்.
  1. தாமதமான காலகட்டத்திற்கு நஷ்ட ஈடாக, கூடுதலான வட்டியை வாடிக்கையாளர் கேட்காமலேயே கொடுக்கவேண்டும்.
  2.  நகர கூட்டுறவு வங்கிகள் அமெரிக்க டாலர் காசோலை வசூலிப்புக் கொள்கையில் சிறிய மதிப்பிலான காசோலைகளுக்கு உடனடி வரவு வைப்பதை ஒரு கொள்கையாக்க கொளல் வேண்டும்.
  3. காசோலைகளுக்கு பணம் வசூலிப்பதில் ஏற்படும் தாமதத்தை குறித்து வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்கள் சரியான முறையில் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும்.
  4. நகர கூட்டுறவு வங்கிகள் தொழில் முறையில் உள்ள நல்ல வழிகளை ஆய்ந்து, அவற்றை எங்கெங்கு முடியுமோ, அங்கங்கு பிரயோகிக்கவேண்டும்.

3. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள

(A.K.கெளண்ட்)
தலைமைப் பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?