RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78440199

அந்நியச்செலாவணி வணிகத்திற்கு அங்கிகரிக்கப்பட்டவங்கிகள் அனைத்தும்

RBI / 2004-05 / 492
A.P. (DIR Series) சுற்றறிக்கை எண் 46

ஜுன்14, 2005

அந்நியச்செலாவணி வணிகத்திற்கு அங்கிகரிக்கப்பட்ட
வங்கிகள் அனைத்தும்

 

அன்புடையீர்,

குடியிருப்பாளரான இநதியரின் வெளிநாட்டுப் பயணத்தின்
போது பன்னாட்டு பற்று அட்டை / Store Value Cards/Charge Cards/Smart Cards
இவற்றின் பயன்பாடு

 அறிவிப்பு எண் FEMA 15/2000-RB. 3-5, 2000 தேதியிட்ட அறிவிப்பின் படி பற்று அட்டை, தானியங்கி பணவழங்கு அட்டை அல்லது ஏதாவதொரு கருவிமூலம பணம் சம்பந்தப்பட்ட பொறுப்பினை உருவாக்க முடியுமானால், அதனைப் ‘பணம்’ என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குடியிருப்பாளர் ஒருவர் இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்கையில், ஏற்படும் செலவுகளுக்கான பணம் செலுத்த பயன்படுத்தும் போது கடன் அட்டைகளின் வரையறைக்குட்பட்ட பயன்பாட்டிற்கு, பின் குறிப்பிதும் விதியிலுள்ள கட்டுப்பாடுகள் பொருந்தாது. அந்தக்கட்டுப்பாடுகள் A.P. (DIR Series) சுற்றறிக்கை எண் 73 (ஜனவரி 24, 2003 தேதியிடப்பட்டதில்) அந்நியச் செலாவணி கண்காணிப்பு (நடப்புக்கணக்கு நடவடிக்கை) விதிகள் 2000ல் விதி 5ல் குறிக்கப்பட்டுள்ளதெனத் தெளிவுபடுத்துகிறோம்

 A. பன்னாட்டு பற்று அட்டை

 இந்திய குடியிருப்பாளர் தனது அயல்நாட்டுப் பயணத்தின் போது பணம் சேமிப்பிலிருந்து எடுக்கவோ, அல்லது கடல் கடந்த வாணிப நிறுவனத்திற்குப் பணம் செலுத்தவோ பயன் படுத்திக்கொள்ளும் பொருட்டு பன்னாட்டு பற்று அட்டைகளை அந்நியச்செலாவணி வர்த்தகம் செய்ய அங்கிகரிப்பட்ட வங்கிகள் வழங்குவதாக அறிகிறோம். இந்த பற்று அட்டைகள் அனுமதிக்கப்பட்ட நடப்புக்கணக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம். மேலும், இந்திய அரசு அறிவிப்பு எண் GSR 381/E மே 3, 2000 தேதியிடப்பட்டதில் உள்ள அட்டவணையில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு வகையான செலவுகளுக்கான் (அவ்வப்போது திருத்தப்படும்) வரையறைகள். இந்த பன்னாட்டுப் பற்று அட்டை பயன்பாட்டில் செய்யப்படும் பட்டுவாடாக்களுக்கும் பொருந்தும்.

3. அந்நியச்செலாவணி பெறுவது தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் / செலவு வகைகள் உதாரணமாக, லாட்டரிசீட்டுகள், தடைவிதிக்கப்பட்ட பத்திரிக்கைகள், சூதாட்டம், மீட்டுஅழக்கும் வசதிகள் போன்ற தடைசெய்யப்பட்ட செலவுகளுக்காக் பன்னாட்டுப் பற்று அட்டைகளை இணையதளத்தில் பயன்படுத்தகூடாது என்பது மேலும் தெளிவுபடுத்தப்படுகிறது.

4. ஆவணைசான்று மற்றும் அறிக்கை சமர்ப்பணம்

 அந்நியச்செலாவணி வழங்குகையில் பின்பற்றப்படும் நடைமுறையிலுள்ள செயல் குறைகள், மற்றும் ஆவணச்சான்றுகளை பன்னாட்டு பற்று அட்டை வழங்கும்போதும், அங்கிகதிக்கப்பட்ட வங்கிகள் பின்பற்றி தம்மை உறுதிப்படுத்திக்கொள்வார்களாக. ஓராண்டில் பன்னட்டு கடன் அட்டை உரிமையாளர்களின் அண்ணியச்செலாவணியிலான் பயன்பாட்டுத்தொகை அமெரிக்காடாலர் மதிப்பில் 1,00,000 ஜ விட அதிகமானால், அங்கிகரிக்கப்பட்ட வங்கிகளின் பன்னாட்டு வங்கிப்பிரிவு / அல்லது அதன் அந்நியச்செலாவணித் துறை டிசம்பர் 31ம் தேதியிட்ட அறிக்கையை ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த அறிக்கை அந்த ஆண்டின் பின்வரும் ஜனவரி 20க்குள் தலைமைப்பொதுமேலாளர், அந்நியச்செலாவணி கட்டுப்பாட்டுத்துறை, அயல்நாட்டுப்பணம் கொடுப்புப் பிரிவு, மும்பை, 400001க்கு அனுப்பு வைக்கப்படவேண்டும்.

B. குடியிருப்பாளரான ஒருவர் தமது சொந்தக்காரணங்கான அல்லது வியாபார ரீதியான வெளிநாட்டு போது அயல்நாட்டில் தானியங்கி பணம் வழங்கு எந்திரங்களிலிருந்து பணம் எடுக்கவும், சேமிப்பிலிருந்து பணம் பெறவும் கடல் கடந்த வணிகநிறுவனங்களுக்குப் பணம் தரவும் பயன்படுத்தும் விதமாக அங்கிகரிக்கப்பட்ட வங்கிள் Store Value Card / Charge Card / Smart Card களை வெளியிட்டு வருவது நம் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய அட்டைகளை வெளியிட ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை என்பதைத் தெளிவுபுடுத்துகிறோம் அதே சமயம் அனுமதிக்கப்பட்ட நடப்புக்கணக்கு நடவடிக்கைகளுக்கும் மற்றும் அந்நியச்செலாவணி கண்காணிப்பு (நடப்புக்கணக்கு நடவடிக்கைகள்) விதிகள் 2000ன் படி விதிக்கப்பட்ட வரையறைகளுக்கு உடபட்டும் இந்த அட்டைகள் பயன்படுத்தப்படவேண்டும்.

6. அங்கிகரிக்கப்பட்ட வணிகவங்கிகள் இந்த சுற்றறிக்கையின் கருத்துக்களைத் தத்தம் குழுமுகவர்கள் மற்றும் நுகர்வோர் கவனத்திற்குக் கொண்டு செல்வாராக.

7. இந்தச்சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கட்டளைகள் யாவும் FEMA 1999 (42 of 1999). சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் சட்டப்பிரிவிண் 11(i) கீழ் வெளியிடப்படுகின்றன. மற்ற சட்டத்தின் கீழ் தேவைப்படும் அனுமதிகள் / ஏற்பளிப்புகள் இவற்றிற்கு பாதகம் ஏதுமின்றி இவை வெளியிடப்படுகின்றன.

4. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

நம்பிக்கையுள்ள

 

வினய் பைஜால்
பொது மேலாளர் (பொறுப்பு)


இணைப்பு

மாதிரிப்படிவம்

ஓராண்டுக்காலத்தில் பன்னட்டுப் பற்று அட்டைகள் பயன்பாட்டில் அந்நியச்செலாவணி 1,00,000 அமெரிக்க டாலரைவிட அதிகமானவற்றின் விவரங்கள் குறித்த அறிக்கை - 31, டிசம்பர் ...... ன் கணக்குப்படி.

வங்கியின் பெயர் :

வங்கிக்கணக்கு வைத்திருக்கும் நபரின் பெயர்

பணம் (அமெரிக்க டாலரில்)

குறிப்பு

 

பணமாக எடுக்கப்பட்டது

வணிகநிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது

 
       

 

கையொப்பம்
பெயர் / மற்றும் பதவி
தேதி.
முத்திரை.

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?