வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் – வரம்புகள் தளர்த்தப்படுகின்றன - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் – வரம்புகள் தளர்த்தப்படுகின்றன
அறிவிப்பு எண் 163 நவம்பர் 28, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் – வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக வரம்புகள் விதிக்கப்பட்டதால், சில வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் தயங்குகின்றனர். 2. இது கரன்சிநோட்டுகளின் புழக்கத்தைப் பாதிக்கும் என்பதால், மிகுந்த கவனத்தோடு இதைப் பரிசீரித்துப் பின் வருமாறு முடிவெடுக்கப்பட்டது. வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட (சட்டப்படி செய்லுபடியாகும் நோட்டுகளில்) பணத்தை நவம்பர் 29, 2016-க்குப் பிறகு வரம்புகளைத் தாண்டியும் எடுக்க முடியும். ஆனால் அவற்றிற்கு உயர் மதிப்பிலக்க புதிய நோட்டுகளில் ரூ. 2000 மற்றும் ரூ. 500 ஆகியவற்றில் அளிக்கப்படும். இங்ஙனம் (P. விஜயகுமார்) |