குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ.500 மற்றும் ரூ.1000 சட்டபடி செல்லுபடியாகும் தன்மையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன –முறைசாரா, பாதுகாப்பற்ற ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தகவல்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ.500 மற்றும் ரூ.1000 சட்டபடி செல்லுபடியாகும் தன்மையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன –முறைசாரா, பாதுகாப்பற்ற ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தகவல்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்கிறது
டிசம்பர் 01, 2016 குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ.500 மற்றும் ரூ.1000 சட்டபடி செல்லுபடியாகும் தன்மையிலிருந்து குறிப்பிட்ட வங்கி நோட்டுகள், சட்டபடி செல்லுபடியாகும் தன்மையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை நேரடியாக அலுவலக ரீதியான மின்னஞ்சல் மூலம் அளித்து வருகிறது. அவைகள் இந்திய ரிசர்வ் வங்கி www.rbi.org.in என்ற இணையதளத்திலும் காட்டப்படுகின்றன. சமூக ஊடகங்கள் மூலமாக சில மோசடி பேர்வழிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது போலவே சில வழகாட்டுதல்கள் / அறிவுறுத்தல்களை சுற்றுக்கு விட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது பொதுமக்கள் மற்றும் வங்கியாளர்கள் மனதில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. வங்கிகள் மற்றும் பொதுமக்கள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும் அல்லது அலுவலக ரீதியான மின்னஞ்சல் மூலமாக கிடைக்கப்பெறும் அறுவுறுத்தல்களின்படி மட்டுமே நடக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். முறைசாராத, பாதுகாப்பற்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளியாகி, சுற்றுக்கு விடப்படும் இதர ஆதாரபூர்வமற்ற, கேள்விக்குரிய, சோதித்தறியமுடியாத ஆவணங்களை நம்பவேண்டாமென்று வங்கிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்துகிறோம். (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1382 |