குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – நவம்பர் 10 முதல் நவம்பர் 27, 2016 வரை வங்கிகளின் நடவடிக்கைகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – நவம்பர் 10 முதல் நவம்பர் 27, 2016 வரை வங்கிகளின் நடவடிக்கைகள்
நவம்பர் 28, 2016 குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – நவம்பர் 10 முதல் நவம்பர் 27, 2016 வரை நவம்பர் 08, 2016 நள்ளிரவு முதல் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வர்த்தக வங்கிகளின் பிராந்திய கிராமப்புற, நகரக் கூட்டுறவு முகப்புகளில் மாற்றவும், கணக்குகளில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்பின் நவம்பர் 10, 2016 முதல் நவம்பர் 27, 2016 வரை வங்கிகளில் மாற்றப்பட்ட/ டெபாசிட் செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட மதிப்பிலக்க கரன்சி நோட்டுகளின் மதிப்பு மொத்தம் ரூ. 8,44,982 கோடி (மாற்றப்பட்டவை ரூ. 33,948 கோடி, டெபாசிட் மதிப்பு ரூ. 8,11,033 கோடி). மக்கள் மொத்தமாக இந்த காலக்கட்டத்தில் ரூ. 2,16,617 கோடி தொகையை முகப்பில், ATM-களிலிருந்து எடுத்துள்ளனர். (அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1349 |