அனைத்து முடிவுகளும் ஒரு குழுவினால் எடுக்கப்படுகின்றன: இந்திய ரிசர்வ் வங்கி - ஆர்பிஐ - Reserve Bank of India
அனைத்து முடிவுகளும் ஒரு குழுவினால் எடுக்கப்படுகின்றன: இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, இன்று செய்தி முகமையான Reuters வெளியிட்ட ஒரு தீங்கான மற்றும் ஜோடிக்கப்பட்ட அறிக்கையைக் குறிப்பிட்டு அந்த அறிக்கைக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையில், மத்திய வங்கியில் எவ்வாறு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து முகமைக்கு எந்த கருத்தும் இல்லை என்று கூறியதுடன் அனைத்து பணவியல் கொள்கை முடிவுகளும் பெறப்படும் அனைத்து தகவல்களையும் தரவுகளையும் ஆழமாக பகுப்பாய்வு செய்தும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அனைத்து அம்சங்களையும் ஆலோசித்தும் எடுக்கப்படுகின்றன என்று அவ்வறிக்கை விளக்கியது. பணவியல் கொள்கைக்கு பொறுப்பான துணை கவர்னர் மற்றும் நிர்வாக இயக்குனருடன் நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான பரிசீலனைக்கு பிறகு முடிவுகள் கவர்னரால் ஒருமனதாக எடுக்கப்படுகின்றன.
அல்பனா கில்லாவாலா
முதன்மை ஆலோசகர்
தொடர்புத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
ஷாஹித் பகத் சிங் சாலை
மும்பை 400 001
இந்தியா
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: