லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய அறிவிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய அறிவிப்பு
லட்சுமி விலாஸ் வங்கி (LVB) மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (IBHFL) ஆகியவை தத்தம் இயக்குநர்கள் குழுமங்களின் ஒப்புதலுடன் ஏப்ரல் 5, 2019 அன்று இணைப்பு அறிவிப்பை வெளியிட்டதாக ஊடக அறிக்கைகள் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிந்தது. LVB இயக்குநர்கள் குழுமத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குநர்கள் இருவர் இருப்பது இந்த திட்டத்திற்கான ரிசர்வ் வங்கியின் மறைமுக ஒப்புதலைக் குறிக்கிறது என்று ஊடகங்களின் ஒரு பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விணைப்பு அறிவிப்புக்கு ரிசர்வ் வங்கியின் எவ்வித ஒப்புதலும் இந்த நிலையில் வழங்கப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. LVB இயக்குநர்கள் குழுமத்தில் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட கூடுதல் இயக்குநர்கள் இருப்பது, இவ்விணைப்பு திட்டத்திற்கான ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை குறிக்காது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், கூடுதல் இயக்குநர்கள் இத்திட்டத்தின் மீது தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை என்று கூட்டத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்களிடமிருந்து இம்முன்மொழிவுகள் பெறப்படும்போது, தற்போதுள்ள ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள்/வழிமுறைகளின்படி இந்திய ரிசர்வ் வங்கியில் ஆய்வு செய்யப்படும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2390
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: