‘வீட்டு விலைக் குறியீடு' (HPI) மற்றும் 'குடியிருப்பு சொத்து விலைக் குறியீடு' (RPPI) : விளக்கம் - ஆர்பிஐ - Reserve Bank of India
‘வீட்டு விலைக் குறியீடு' (HPI) மற்றும் 'குடியிருப்பு சொத்து விலைக் குறியீடு' (RPPI) : விளக்கம்
RBI ஆல் தொகுக்கப்பட்ட 'வீட்டு விலைக் குறியீடு' (HPI) மற்றும் 'குடியிருப்பு சொத்து விலைக் குறியீடு' (RPPI) பற்றி மிண்ட், மும்பை பதிப்பில் ஜூலை 19, 2017 அன்று வெளியிடப்பட்ட 'புதுப்பிக்கப்பட்ட NHB RESIDEX வீடு வாங்குபவர்களுக்கு உதவுமா?' என்ற செய்திக் கட்டுரையில் இடம்பெற்ற கருத்துகள் சம்பந்தமாக பின்வருபவை தெளிவுபடுத்தப்படுகின்றன:
1. HPI ஆனது சொத்துப் பதிவுத் தரவுகளைப் பயன்படுத்தி RBI ஆல் தொகுக்கப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை, ஒரு காலாண்டு கால பின்னடைவுடன் வெளியிடப்படுகிறது. அநேகமாக இதே நிலை NHB RESDIEX-லும் இருக்கலாம். மார்ச் 2017க்கான சமீபத்திய HPI, ஜூலை 17, 2017 அன்று வெளியிடப்பட்டது. எனவே, HPI தரவுகளை வெளியிடுவதில் பெரும் கால பின்னடைவு இருப்பதாக செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது சரியல்ல.
2. வீட்டுக் கடன்களை வழங்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களால் மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகள் / மனைகள் போன்றவற்றின் மதிப்பிடப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி, RPPI-ஐ RBI தொகுக்கிறது. Q1:2010-11 முதல் Q3:14-15 வரையிலான தரவுகளின் அடிப்படையில், தரவுகளின் பயன் மற்றும் செயல்முறை பற்றிய பொதுக் கருத்துக்களை பெற மே 2015-ல் RBI இணையதளத்தில்(https://rbi.org.in/scripts/PublicationsView.aspx?id=16223)), 'இந்தியாவில் குடியிருப்பு சொத்து விலைகளின் சமீபத்திய போக்குகள்: வீட்டுக் கடன் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் உள் தேவைகளுக்காக இத்தரவுகளைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது
ஜோஸ் ஜே. காட்டூர்
தலைமை பொது மேலாளர்
தொடர்பு துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
ஷாஹித் பகத் சிங் சாலை
மும்பை 400 001
இந்தியா
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: