தங்க இருப்புகளின் பாதுகாப்பு பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம் - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்க இருப்புகளின் பாதுகாப்பு பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம்
2014-ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்புகளின் ஒரு பகுதியை வெளிநாடுகளுக்கு மாற்றியது குறித்து அச்சு மற்றும் சமூக ஊடகங்களின் சில பிரிவுகளில் செய்திகளை கண்டோம். உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்களுடைய தங்க இருப்புகளை வெளிநாடுகளில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளின் மத்திய வங்கிகளின் பாதுகாப்பு பொறுப்பில் வைத்திருப்பது வழக்கமான நடைமுறையாகும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியால் 2014 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு தங்கம் எதுவும் அனுப்பப்படவில்லை என்பதை தெரிவிக்கிறோம். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2600
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: