rbi.page.title.1
rbi.page.title.2
ஏடிஎம்/ஒயிட் லேபிள் ஏடிஎம்
பதில். இருக்கிறது. நவம்பர் 01, 2014 முதல் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கி குறைந்தபட்ச எண்ணிக்கையில் பின் வரும் படி இலவச பரிவர்த்தனைகளை வழங்கவேண்டும்.
- எந்த ஒரு இடத்திலும் இருக்கும் வங்கியின் சொந்த ஏடிஎம்களில் (ஆன்–அஸ் பரிவர்த்தனைகள்): வங்கிகள் அவர்கள் ஏடிஎம்கள் எங்கிருந்தாலும் தமது சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து பரிவர்த்தனைகளை ( பணம் மற்றும் பணம் சாரா பரிவதர்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
- மெட்ரோ நகரங்களில் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் (ஆஃப்–அஸ் பரிவர்த்தனை): ஆறு மெட்ரோ நகரங்களில் அதாவது மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத் நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் வங்கி தனது சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் மூன்று இலவச பரிவர்த்தனைகளை( பணம் மற்றும் பணம் சாரா பரிவதர்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
- மெட்ரோ அல்லாத நகரங்களில் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் (ஆஃப்–அஸ் பரிவர்த்தனை): மேலே சொல்லப்பட்ட ஆறு மெட்ரோ நகரங்களைத் தவிர இதர இடங்களில் உள்ள வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் வங்கி தனது சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து இலவச பரிவர்த்தனைகளை( பணம் மற்றும் பணம் சாரா பரிவர்த்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
பதில். ஏடிஎம்களில் குறைந்தபட்ச இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை ஆர்பிஐ கட்டாயமாக்கியுள்ளது. வங்கிகள் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இலவச பரிவர்த்தனைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.
பதில். பிஎஸ்பிடிஏ–களுக்கு மேற்கண்ட விதிகள் பொருந்தாது. ஏனென்றால் பிஎஸ்பிடிஏ–களுக்கு பணம் எடுப்பதற்கான நிபந்தனைகள் இருக்கின்றன.
பதில். மேலே சொல்லப்பட்டுள்ளபடி ஏடிஎம்–ல் செய்யப்படும் இலவச பரிமாற்றங்களில் பணம் மற்றும் பணம் அல்லாத பரிமாற்றங்களும் அடங்கும்.
பதில். ஏடிஎம்–களை நிறுவும் வங்கிகள் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் தமது ஏடிஎம்களிலும் அது மெட்ரோ நகரத்தில் உள்ளதா அல்லது மெட்ரோ அல்லாத நகரத்தில் உள்ளதா என்று உரிய விதத்தில் (ஏடிஎம்–ல் அறிவிப்பு/ ஸ்டிக்கர்/போஸ்டர் போன்றவை) எழுதி வைக்க வேண்டும்.இதன் மூலம் வாடிக்கையாளர் தனக்கு கிடைக்கும் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள முடியும்.
பதில். ஆம், கட்டாயமான இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ( மேலே கேள்வி 11க்கு அளிக்கப்பட்ட பதிலின்படி) வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் வங்கி விதிக்கும் இந்த கட்டணங்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ₹20/–க்கு (மற்றும் வரிகள் ஏதேனும் இருந்தால் அவை உட்பட) மிகாமல் இருக்க வேண்டும்.
பதில். பணம் எடுப்பதற்கான பின் வரும் வகையிலான பணம் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணங்களை வங்கிகள் தாமே தீர்மானித்துக் கொள்ளலாம்: (a) கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தல் (b) வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்–ல் பணம் எடுத்தல்.
பதில். கார்டு வழங்கிய வங்கியின் ஏடிஎம் இல்/ வேறு வங்கியின் ஏடிஎம் இல்/ டபுள்யூஎல்ஏ–வில் பயன்படுத்தினாலும் வாடிக்கையாளர் உடனடியாக கார்டு வழங்கிய வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும்.
பதில். தவறிய/ சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளை பற்றி புகார் செய்வதற்காக வங்கிகள் தமது ஏடிஎம் உள்ள இடங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரியின் பெயர்/ தொலைபேசி எண்/டோல் ஃப்ரீ எண்கள்/ ஹெல்ப் டெஸ்க் எண்கள் போன்றவற்றை அறிவிப்பில் காட்டியிருக்க வேண்டும். அதே போல டபுள்யூஎல்ஏ–விலும் அதிகாரியின் தொலைபேசி எண்/டோல் ஃப்ரீ எண்கள்/ ஹெல்ப் லைன் எண்கள் போன்றவற்றை அறிவிப்பில் காட்டியிருக்க வேண்டும்.
பதில். ஆர்பிஐ வழிமுறைகளின்படி (டிபிஎஸ்எஸ் பிடி எண் 2632/02/10.002/2010–2011 தேதி மே 27, 2011), ஏடிஎம்–ல் தவறிய பரிவர்த்தனைகளுக்கான புகாரை கார்டை வழங்கிய வங்கி 7 வேலை நாட்களுக்குள் பணத்தை மீண்டும் வாடிக்கையாளரின் கணக்கில் கிரெடிட் செய்து தீர்க்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.