ஏடிஎம்/ஒயிட் லேபிள் ஏடிஎம்
பதில். வங்கிசாரா நிறுவனங்கள் அமைத்து இயக்கும் ஏடிஎம்களுக்கு டபிள்யூஎல்ஏ என்று பெயர். வங்கிசாரா நிறுனங்கள் இயக்கும் ஏடிஎம்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் பேமெண்ட் அண்டு செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் ஆக்ட் 2007ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட டபிள்யூஎல்ஏ இயக்கங்கள் பற்றிய பட்டியல் ஆர்பிஐயின் இணையதளத்தில் கிடைக்கிறது:
பதில். ஒரு வாடிக்கையாளருக்கு டபிள்யூஎல்ஏ பயன்பாடு மற்ற வங்கிகளின் (கார்டு வழங்கும் வங்கியைத் தவிர) ஏடிஎம் செயல்பாடு போலவேதான் இருக்கும். ஆனால் டபிள்யூஎல்–களில் ரொக்க டெபாசிட்டுகள் இதர மதிப்புக்கூடுதல் சேவைகளுக்கு அனுமதி இல்லை.
பதில். ஒயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க வங்கி சாராத நிறுவனத்தை அனுமதிப்பதன் அடிப்படைக் காரணம் வாடிக்கையாளருக்கான சேவையை அதிகரிப்பது / மேம்படுத்தப்படுத்துவது ஆகும். மேலும் வாடிக்கையாளர் சேவைக்காக கிராமப்புறங்களில் பரவலாக ஏடிஎம்களை அமைப்பதகும்.
பதில். ரொக்கம் வழங்குதலைத் தவிர, ஏடிஎம்கள்/டபிள்யூஎல்ஏக்கள் இதர பல சேவைகளை/வசதிகளை வழங்குகின்றன. இவற்றில் அடங்கிய சில:
- கணக்கு பற்றிய விவரங்கள்
- ரொக்கம் டெபாசிட் செய்தல் (டபிள்யூஎல்ஏகளில் அனுமதி இல்லை)
- பில்களுக்கு வழக்கமாக பணம் செலுத்துதல் (டபிள்யூஎல்ஏகளில் அனுமதி இல்லை)
- மொபைல்களுக்கு ரீலோடு வவுச்சர் வாங்குதல் (டபிள்யூஎல்ஏகளில் அனுமதி இல்லை)
- சிறு/குறு கணக்கு அறிக்கைகளை உருவாக்குதல்.
- பின் மாற்றம்
- காசோலை புத்தகம் கோருதல்.
பதில். வழங்குவோர் அனுமதித்துள்ளபடி ஏடிஎம் / ஏடிஎம் கம் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை பல்வேறு பரிவர்த்தனைகளுக்காக ஏடிஎம்கள் / டபிள்யுஎல்ஏக்களில் பயன்படுத்தலாம்.
பதில். இருக்கிறது. நவம்பர் 01, 2014 முதல் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கி குறைந்தபட்ச எண்ணிக்கையில் பின் வரும் படி இலவச பரிவர்த்தனைகளை வழங்கவேண்டும்.
- எந்த ஒரு இடத்திலும் இருக்கும் வங்கியின் சொந்த ஏடிஎம்களில் (ஆன்–அஸ் பரிவர்த்தனைகள்): வங்கிகள் அவர்கள் ஏடிஎம்கள் எங்கிருந்தாலும் தமது சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து பரிவர்த்தனைகளை ( பணம் மற்றும் பணம் சாரா பரிவதர்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
- மெட்ரோ நகரங்களில் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் (ஆஃப்–அஸ் பரிவர்த்தனை): ஆறு மெட்ரோ நகரங்களில் அதாவது மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத் நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் வங்கி தனது சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் மூன்று இலவச பரிவர்த்தனைகளை( பணம் மற்றும் பணம் சாரா பரிவதர்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
- மெட்ரோ அல்லாத நகரங்களில் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் (ஆஃப்–அஸ் பரிவர்த்தனை): மேலே சொல்லப்பட்ட ஆறு மெட்ரோ நகரங்களைத் தவிர இதர இடங்களில் உள்ள வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் வங்கி தனது சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து இலவச பரிவர்த்தனைகளை( பணம் மற்றும் பணம் சாரா பரிவர்த்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
பதில். பிஎஸ்பிடிஏ–களுக்கு மேற்கண்ட விதிகள் பொருந்தாது. ஏனென்றால் பிஎஸ்பிடிஏ–களுக்கு பணம் எடுப்பதற்கான நிபந்தனைகள் இருக்கின்றன.
பதில். வாடிக்கையாளர்கள் தனது ஏடிஎம்/ டபிள்யூஎல்ஏவில் பாதுகாப்பாக பரிவர்த்தனைகளுக்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- வாடிக்கையாளர் தனது ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ பரிவர்த்தனைகளை மிக ரகசியமாக செய்ய வேண்டும்.
- ஒரே நேரத்தில் ஒரு கார்டுதாரர் மட்டுமே ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ கியோஸிற்குள் நுழைய வேண்டும்.
- கார்டுதாரர் தனது கார்டை யாருக்கும் கொடுக்கக்கூடாது.
- கார்டுதாரர் தனது பின்–ஐ கார்டில் எழுதி வைக்கக்கூடாது.
- கார்டுதாரர் தனது பின்–ஐ யாருக்கும் சொல்லக்கூடாது.
- ஏடிஎம்–ல் கார்டை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர் யாரும் பார்க்காதவாறு தனது பின்–ஐ உள்ளிட வேண்டும்.
- யாரும் சுலபமாக ஊகிக்கும் வகையிலான பின்–ஐ கார்டுதாரர் பயன்படுத்தக்கூடாது.
- கார்டுதாரர் தனது கார்டை ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ–வில் ஒருபோதும் விட்டுவிட்டு வரக்கூடாது.
- வாடிக்கையாளர் ஏடிஎம்/ டபிள்யூஎல்ஏ–வில் செய்யும் பரிவர்த்தனைகள் பற்றிய செய்தியை பெறுவதற்கு கார்டு வழங்கும் வங்கியில் தனது மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். கணக்கில் அங்கீகாரமற்ற கார்டு பயன்பாடு காணப்பட்டால், அதுபற்றி உடனடியாக கார்டு வழங்கிய வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
- ஏடிஎம்/டபிள்யூஏ–வில் ஏதாவது கூடுதல் கருவி(கள்) இணைக்கப்பட்டிருக்கிறதா என்று கார்டுதாரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் விவரங்களை மோசடி செய்து பெறுவதற்காக இந்த கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை காணப்பட்டால் அது பற்றி அங்குள்ள பாதுகாவலருக்கு/வங்கிக்கு/ டபிள்யூஎல்ஏ வைத்துள்ள நிறுவனத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
- ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ–களில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் தென்படுகிறதா என்று கார்டுதாரர் கண்காணிக்க வேண்டும். ஏடிஎம் பரிவர்த்தனைகளை செய்யும்போது முன்பின் தெரியாதவர்கள் உங்களிடம் பேச்சுக் கொடுத்தாலோ, அல்லது பரிவர்த்தனைக்கு உதவி செய்ய முன்வந்தாலோ அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும்.
- வங்கி ஊழியர்கள் ஒருபோதும் உங்கள் கார்டு விவரங்கள் அல்லது பின் போன்றவற்றை தொலைபேசியிலோ/ மின்னஞ்சலிலோ கேட்கவே மாட்டார்கள். எனவே வங்கியின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் எவரிடமிருந்தும் அவ்வாறான கோருதல்கள் வந்தால் கார்டுதாரர்கள் அதற்கு பதிலளிக்கக் கூடாது.
பதில். வங்கிகள் தற்போதுள்ள மாக்னடிக் ஸ்ட்ரிப் கார்டுகள் அனைத்தையும் டிசம்பர் 31, 2018 தேதிக்குள் இஎம்வி மற்றும் பின் கார்டுகளாக மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் மாக்னடிக் ஸ்ட்ரிப் கார்டை மாற்றி இஎம்வி மற்றும் பின் கார்டு தரவில்லை என்றால் அவர் உடனே தனது வங்கிக் கிளையை அணுகி அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் இந்த கேள்விகள் இந்திய ரிசர்வ் வங்கியால் தகவல் மற்றும் பொது வழிகாட்டுதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் / அல்லது அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு வங்கி பொறுப்பேற்காது. ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் அல்லது விளக்கங்களுக்கு, அவ்வப்போது அது தொடர்பாக வங்கியால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளால் ஒருவர் வழிநடத்தப்படலாம்.