2006-07 ஆண்டுக்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு நியாயமான நடவடிக்கைகளுக்கான நெறிமுறை -வங்கிக் கட்டணத்தை விளம்பரப்படுத்துதல் - ஆர்பிஐ - Reserve Bank of India
2006-07 ஆண்டுக்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு நியாயமான நடவடிக்கைகளுக்கான நெறிமுறை -வங்கிக் கட்டணத்தை விளம்பரப்படுத்துதல்
RBI/2006-07/79
CSD.BOS.5/13.33.01/2005-06 ஜூலை 20, 2006
தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரி / நிர்வாக இயக்குநர்
வணிக வங்கிகள் அனைத்தும்
(பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் உட்பட)
அன்புடையீர்,
2006-07 ஆண்டுக்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு -
நியாயமான நடவடிக்கைகளுக்கான நெறிமுறை -
வங்கிக் கட்டணத்தை விளம்பரப்படுத்துதல்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பில், 2006 மே 16 ஆம் தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை RPCD.BOS.81/13.33.01/2005-06ஐப் பார்க்கவும். அதில், வங்கிகள் வசூலிக்கும் சேவைக் கட்டண விபரங்களை விளம்பரப்படுத்தும் வகையில், அந்தந்த வங்கிகள் தங்கள் இணைய தளத்தில் அவைகளை வெளியிட்டு, அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களையும் உடனுக்குடன் இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தோம். வாடிக்கையாளர்கள் எளிதில் அவைகளை அறிந்து கொள்ள வசதியாக வங்கிகள் தங்களது இணையதளத்தில், உள்ளகப் பக்கத்தில், நன்கு தெரியும்படியான ஓர் இடத்தில் “சேவைக் கட்டணங்கள்” என்ற தலைப்பில் வெளியிட வேண்டுமென்று அறிவுறுத்துகிறோம்.
2. அதே உள்ளகப் பக்கத்திலேயே, வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை அளிக்க வசதியாக, புகார் மாதிரிப் படிவத்தையும், புகார்-துறை தீர்த்துவைக்க நியமிக்கப்பட்ட அதிகாரியின் பெயர் முகவரியையும் வெளியிட வேண்டும். புகார் மனு படிவத்தின் முதல் கருத்தாக, குறைகளைத் தீர்த்து வைக்க முதலில் புகார்களை வங்கியிலேயே சமர்ப்பித்து, ஒரு மாத காலத்திற்குள் குறை தீர்த்து வைக்கப்படவில்லை எனில் வங்கிக் குறை தீர்ப்பாளரை அணுகலாம் என்ற விபரத்தைக் குறிப்பிட வேண்டும். இது போன்ற தகவலை வங்கியின் எல்லாக் கிளைகளிலும் நன்கு விளம்பரப்படுத்தி, வங்கிக் குறை தீர்ப்பாளர் பெயர் முகவரியையும் வெளியிட வேண்டும். கூடவே வங்கியின் கட்டுப்பாட்டு அதிகாரியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் இவைகளைக் குறிப்பிட்டு புகார்கள் எவருக்குச் சமர்ப்பிக்கப் படலாம் என்பதையும் நன்கு குறிப்பிட வேண்டும்.
3. ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில், அனைத்து வங்கிகளின் சேவைக் கட்டண விபரங்களையும் வெளியிட இருக்கிறோம். வாடிக்கையாளர் எந்தெந்தச் சேவைகளுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு கட்டணம் என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.
4. மேலே சொல்லப்பட்ட அறிவுரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
5. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
உண்மையுள்ள
கஸா சுதாகர்
தலைமைப் பொதுமேலாளர்