நிவாரண / சேமிப்புப் பத்திரங்களுக்கு நியமன வசதி பற்றி தொகுப்புச் சுற்றறிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
நிவாரண / சேமிப்புப் பத்திரங்களுக்கு நியமன வசதி பற்றி தொகுப்புச் சுற்றறிக்கை
RBI/2009-2010/54 ஜூலை 1, 2009 தலைவர் / நிர்வாக இயக்குனர் பாரதீய ஸ்டேட் வங்கி மற்றும் துணை வங்கிகள் அன்புள்ள ஐயா, நிவாரண / சேமிப்புப் பத்திரங்களுக்கு நியமன வசதி பற்றி தொகுப்புச் சுற்றறிக்கை நிவாரண / சேமிப்புப் பத்திரங்களுக்கான நியமன வசதிகள் பற்றி, ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்தில் அரசு மற்றும் வங்கி கணக்குகள் துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பொது கடன் அலுவலகங்கள் / முகவர் வங்கிகளுக்கு மேற்கண்ட தலைப்பில் அனைத்து நடப்பு செயல் உத்தரவுகளையும், ஒரே இடத்தில் கொண்டிட, நிவாரண / சேமிப்புப் பத்திரங்களுக்கு நியமன வசதி பற்றி மாற்றப்பட்ட தொகுப்புச் சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 30ஆம் தேதி வரை புதுப்பிக்கப்படுகிறது. அதற்கேற்ப, திருத்தப்பட்ட சுற்றறிக்கை 30.6.2009 வரையிலான மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்களது இணையதளமான www.rbi.org.in என்பதில் பார்க்க வசதி உண்டு. தயவு செய்து பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும். உங்களது உண்மையுள்ள (இந்திரா நாணு) தொகுப்புச் சுற்றறிக்கை நிவாரண / சேமிப்பு பத்திர திட்டங்கள்
விதிவிலக்குகள் – நியமனம் கீழ்க்கண்டவைகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை (a) பத்திர சான்றிதழ் / பி.எல்.ஏ.வை 18 வயதிற்கு உட்பட்டவரின் சார்பாக வயது வந்தவர் வைத்திருக்கும்பொழுது; (b) பத்திர சன்றிதழ் வைத்திருப்பவருக்கு அதன்மூலம் லாபகரமான வட்டி போன்றவை இல்லாமலும் ஆனால் ஒரு அதிகாரி என்ற முறையிலோ அல்லது பொறுப்பாளர் என்ற முறையிலோ வைத்திருந்தால்; நியமனத்தை நீக்குதல் சேமிப்பு பத்திர விஷயத்தில், நியமனம் கீழ்க்கண்டவைகளில் நீக்கப்படுகிறது. (a) பத்திரச் சான்றிதழ் வைத்திருப்பவர் பொது கடன்அலுவலகம் மற்றும் முகவர் வங்கிகளுக்கு நியமனத்தை மாற்றுதல் அல்லது நீக்குதலுக்கு விண்ணப்பித்து, மற்றும் அந்த மாற்றுதல் அல்லது நீக்குதல் அந்த அலுவலகத்தால் முறையாக பதிவு செய்யப்படும்பொழுது (b) பத்திரச் சான்றிதழ் வைத்திருப்பவர் அதனை அடுத்தவருக்கு மாற்றிக் கொடுக்கும்பொழுது இந்த துறையின் பல்வேறுபட்ட சுற்றறிக்கைகளின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட தொகுப்புச் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. அவைகளாவன:
|