மூத்த குடிமக்களுக்கான வசதிகள் மீதான IVR-கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
மூத்த குடிமக்களுக்கான சேவைகள் பற்றிய ஐவிஆர்எஸ்
உங்களுக்கு 70 வயதிற்கும் மேலிருந்தால், சில அடிப்படை வங்கிப் பரிவர்த்தனைளை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? வங்கி உங்கள் வீட்டிற்கே வந்து ரொக்கம் அல்லது காசோலையை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை வழங்கும். மேலும் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணத்தை மற்றும் உங்கள் கணக்கில் எடுக்கப்படும் வரைவோலை போன்றவற்றை உங்கள் வீட்டிலேயே வழங்கும். மிகவும் முக்கியமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே கேஒய்சி ஆவணங்கள், வாழ்க்கை சான்று போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். வங்கி இந்த சேவைகளுக்காக அதன் மேலாண்மை குழு ஒப்புதல் அளித்துள்ளபடி, உங்களிடம் கட்டணம் வசூலிக்கலாம்; இருப்பினும் ஒரு சில சேவைகளை மூத்த குடிமக்களுக்காக இலவசமாக வழங்குமாறு வங்கிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேவைகள் பற்றி வங்கிகளுக்கு ஆர்பிஐ கொடுத்துள வழிமுறைகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு காணவும் www.rbi.org.in/seniorcitizens
ஆடியோ
மூத்த குடிமக்களுக்கான சேவை பற்றிய எஸ்எம்எஸ்–ஐ கேட்க இங்கு க்ளிக் செய்யவும் (இந்தி மொழி)
மூத்த குடிமக்களுக்கான சேவை பற்றிய எஸ்எம்எஸ்–ஐ கேட்க இங்கு க்ளிக் செய்யவும் (ஆங்கில மொழி)
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்