மோசடி இமெயில்கள், அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
கண்ணோட்டம்
கண்ணோட்டம்
அதிகத் தொகைக்கு வாக்குறுதி அளிக்கும் தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் மெஸ்ஸேஜுகள் போலியானவை. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆபத்திற்கு உள்ளாக்காதீர்கள்.
- ஆர்பிஐ, ஆர்பிஐ அலுவலர்களிடமிருந்தோ /உங்கள் கார்டு பிளாக் ஆகிவிட்டது என்று சொல்லும் அதிகாரியிடமிருந்தோ அல்லது அதிகத் தொகைக்கு வாக்குறுதி என்று சொல்லும் அதிகாரியிடமிருந்தோ எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசி அழைப்பு வந்தால் அதைக் கண்டு ஏமாறாதீர்கள்
- தெரிந்த அல்லது தெரியாத நிறுவனத்திடமிருந்து பெரியத் தொகை பெறுவதற்காக முன்பணமாக அல்லது பரிவர்த்தனைக் கட்டணமாக எந்த ஒருத் தொகையையும் செலுத்தாதீர்கள்.
- ஆர்பிஐ தனிநபருக்கான கணக்குகள் எதையும் துவங்குவதில்லை, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு போன்றவற்றையும் வழங்குவதில்லை.
- உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், இன்டர்நெட் யூசர் ஐடி பாஸ்வேர்டு, கிரெடி அல்லது டெபிட் கார்டு எண், சிவிவி, ஏடிஎம் பின் அல்லது ஓடிபி–யை யாரிடமும் தெரிவிக்காதீர்கள். ஆர்பிஐ அல்லது உங்கள் வங்கி இவற்றை கேட்கவே மாட்டார்கள்.
- எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் வரும் லிங்குகளை க்ளிக் செய்து உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்காதீர்கள். வங்கியின் அதிகாரபூர்மான இணையத்தில், உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் பின்புறத்தில் வெளியிட்டுள்ள தகவல்களை மட்டுமே நம்பவும்.
- வெளிநாட்டிலிருந்து அல்லது இந்தியாவிற்குள்ளிருந்து மலிவான நிதியை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் வந்தால் அது பற்றி உள்ளூர் காவல் நிலையம் சைபர் கிரைம் அதிகாரிகள் அல்லது sachet@rbi.org.in,இணையதளத்தில் புகார் செய்யவும்.
நீங்கள் பரிவர்த்தனையை தொடங்கியதைத் தவிர.
For More Information
For More Information
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
வங்கி ஸ்மார்ட்டர்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?