மோசடி இமெயில்கள், அழைப்புகள் மற்றும் இமெயில்கள் மீது எஸ்எம்எஸ் - ஆர்பிஐ - Reserve Bank of India
ஆர்பிஐ எச்சக்கரிக்கை பற்றிய எஸ்எம்எஸ்.
1. அதிக வருமான ஆதாயம் பெறுவதற்காக எந்த ஒரு கட்டணத்தையோ தொகையையோ செலுத்தாதீர்கள். ஆர்பிஐ/ஆர்பிஐ ஆளுநர்/ அரசாங்கம் ஒரு போதும் அவ்விதமான மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் அனுப்பாது, அல்லது அழைக்காது. மேலும் விவரங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும் 8691960000.
2. உங்களுக்கு ஆர்பிஐ/அரசு அமைப்பிலிருந்து லாட்டரி வெற்றி அல்லது மலிவான நிதி போன்றவற்றிற்கான சலுகை வந்தால் அது பற்றி புகார் செய்ய வேண்டிய இணையதளம்: https://sachet.rbi.org.in/Complaints/Add
ஆர்பிஐ எச்சரிக்கைகள் பற்றிய ஓபிடி
மோசடியாளர்கள் ஒவ்வொரு முறையும் மோசடி செய்ய புதிய வழியை கையாளுவார்கள். சில சமயம் உங்கள் லாட்டரி தொகையை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கிக்கு செலுத்துமாறு கேட்பார்கள். அல்லது சில சமயம் உங்களுக்காக வந்திருக்கும் பொருளுக்காக சுங்க வரி கட்டுவதற்கு ஒரு தொகையை செலுத்துமாறு கேட்பார்கள். இது பற்றி சைபர் கிரைம் கிளையிலோ அல்லது உள்ளூர் காவல் நிலையத்திலோ அல்லது sachet.rbi.org.in. இணையதளத்திலோ புகார் செய்யவும்.
ஆர்பிஐ என்ன சொல்கிறது என்று கேளுங்கள். ।
- ஆர்பிஐ தனிநபர்களுக்கான கணக்குகளைத் துவங்குவதுஇல்லை. எனவே ரிசர்வ் வங்கியில் பணம் போடும் கேள்வியே இல்லை. அறிமுகம் இல்லாதவரிடமிருந்து எந்த ஒரு வங்கியிலாவது பணம் செலுத்த வேண்டும் என்று எஸ்எம்எஸ் அல்லது அழைப்பு அல்லது மின்னஞ்சல் வந்தால் அதைக் கண்டு ஏமாறாதீர்கள்.
- உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது சிவிவி, ஓடிபி அல்லது பின் போன்ற விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ரிசர்வ் வங்கி மட்டுமல்ல, உங்கள் வங்கியும்கூட அவ்வாறான விவரங்களை எஸ் எம் எஸ், ஃபோன் அல்லது மின்னஞ்சலில் கேட்க மாட்டார்கள்.
மேலும் விவரங்களுக்கு rbi.org.in இணையதளத்தில் ஆர்பிஐ எச்சரிக்கை பக்கத்தை பார்க்கவும். rbi.org.in
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்