அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் பொறுப்பு மீதான எஸ்எம்எஸ் - ஆர்பிஐ - Reserve Bank of India
அங்கீகாரமற்ற எலெக்ட்ரானிக் வங்கிப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளரின் பொறுப்பு பற்றிய எஸ்எம்எஸ்
உங்கள் வங்கிக் கணக்கில் மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளதா? உங்கள் இழப்பை குறைத்திடுங்கள். உங்கள் வங்கிக்கு உடனே அதை தெரியப்படுத்துங்கள். மேலும் விவரங்களுக்கு 14440 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
அங்கீகாரமற்ற எலெக்ட்ரானிக் வங்கிப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளரின் பொறுப்பு பற்றிய ஐவிஆர்எஸ்
யாராவது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்து பணம் எடுத்தால், உங்கள் வங்கிக்கு அது பற்றி உடனடியாகத் தெரிவியுங்கள். அதை உங்கள் வங்கிக்குத் தெரிவித்ததும் அதற்கான அத்தாட்சியை உங்கள் வங்கியிலிருந்துப் பெறுவதற்கு மறக்காதீர்கள். புகாரைப் பெற்ற தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் உங்கள் வங்கி அதைத் தீர்க்க வேண்டும்.
உங்கள் அலட்சியத்தால், அதாவது உங்கள் பாஸ்வேர்டு, பின், ஓடிபி போன்றவற்றை பகிர்ந்து கொள்வதால், பரிவத்தனை நடந்திருந்தால், அதை வங்கிக்கு அறிவிக்கும் வரை ஏற்படும் இழப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும். நீங்கள் வங்கிக்கு தெரிவித்த பிறகும் மோசடி பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்தால், அந்தத் தொகைகளை வங்கி உங்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு தாமதிக்கிறீர்களோ இழப்பு அவ்வளவு அதிகமாகும். அது ஆர்பிஐ வழிமுறைகள் மற்றும் உங்கள் வங்கியின் மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெற்ற கொள்கைகளுக்கு உட்பட்டுத் தீர்மானிக்கப்படும்.
ஆடியோ
அங்கீகாரமற்ற எலெக்ட்ரானிக் வங்கிப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளரின் பொறுப்புப் பற்றிய எஸ்எம்எஸ்–ஐ கேட்பதற்கு க்ளிக் செய்யவும்.(இந்தி மொழி)
அங்கீகாரமற்ற எலெக்ட்ரானிக் வங்கிப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளரின் பொறுப்புப் பற்றிய எஸ்எம்எஸ்–ஐ கேட்பதற்கு க்ளிக் செய்யவும்.( (ஆங்கில மொழி)
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்